ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று தூசியுடன் கூடிய வானிலைக்கு வாய்ப்பு..!! 20ºC வரை வெப்பநிலை குறையும்..!! NCM தகவல்…!!

Published: 7 Oct 2023, 10:46 AM |
Updated: 7 Oct 2023, 11:01 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் இன்றைய வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மேலும், பகலில் தூசியுடன் நிறைந்த வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும் குடியிருப்பாளர்களுக்கு வானிலை மையம் எச்சரிகை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

NCM இன் வானிலை முன்னறிவிப்பின் படி, பகல் நேரங்களில் லேசானது முதல் மிதமான காற்று புத்துணர்ச்சியூட்டும் வகையில் வீசும் என்றும், சில நேரங்களில் தூசியுடன் கூடிய புழுதிக் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் காலைப் பொழுதில் நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் குறைந்த மேகங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்றும் இன்று (சனிக்கிழமை) இரவு மற்றும் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரப்பதமான சூழல் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், நாட்டின் சில உள்பகுதிகளில், குறிப்பாக மேற்கு நோக்கிய பகுதியை நோக்கி நாளை மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமீரகத்தின் வெப்பநிலை 20ºC வெப்பநிலை வரை சரியும் என்றும், நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்சமாக 43ºC வரை பதிவாகும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.