ADVERTISEMENT

அபுதாபியில் உலா வரும் புதிய ART வாகனம்..!! வழித்தடம், நிறுத்தங்கள் மற்றும் நேரங்கள் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே…!!

Published: 12 Oct 2023, 6:01 PM |
Updated: 12 Oct 2023, 6:58 PM |
Posted By: Menaka

சமீபத்திய நாட்களாக, அமீரக தலைநகரான அபுதாபியில் ட்ராம் போன்ற வாகனங்கள் தண்டவாளங்கள் இல்லாமலேயே சாதாரண சாலைகளில் செல்வதை குடியிருப்பாளர்கள் பார்த்திருக்கலாம்.

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அபுதாபியின் யாஸ் ஐலேண்ட் மற்றும் சாதியாத் ஐலேண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சுருக்கமாக ART பேருந்து என்று அழைக்கப்படும் இந்த நவீன மற்றும் நேர்த்தியான ஆட்டோமேட்டட் ரேபிட் போக்குவரத்து (Automated Rapid Transit – ART) சேவையானது, இப்போது அபுதாபி சிட்டியிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

இது பஸ்ஸா இல்ல Tram ஆ? அபுதாபியை கலக்கும் புதிய வகை வாகனம்.. பயன்பாட்டிற்கு வந்த ART.. அனைத்து விபரங்களும் இங்கே..!!

ADVERTISEMENT

பயணிகளுக்கான மூன்று கேரேஜ்களைக் கொண்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தால் (ITC) இயக்கப்படுகின்றன. கார்பன் உமிழ்வு இல்லாத ஸ்மார்ட் மொபிலிட்டி சேவையானது, பிரபலமான வழித்தடங்களில் நியமிக்கப்பட்ட முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுகிறது.

ART அமைப்பு:

புத்தம் புதிய ART வாகனங்கள் பார்ப்பதற்கு துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பஸ் போன்றே தோற்றமளிக்கும். வழக்கமான பேருந்து மற்றும் டிராம் ஆகியவற்றின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ள ART வாகனங்களில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ARTயின் உட்புறத்தில் இருபுறமும் மெத்தென்ற இருக்கைகள், நின்றவாறே பயணிக்கும் பயணிகள் பிடித்துக் கொள்வதற்கான பட்டைகள் மற்றும் அடுத்து வரவிருக்கும் நிறுத்தத்தை அறிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்புகள் என துபாய் மெட்ரோவில் இருப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ART களின் வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்:

ஆரம்பத்தில் சோதனைக் கட்டத்தில் ARTகள் இயங்கும் போது, 25 நிலையங்கள் வழியாக சுமார் 27 கிமீ நீளமுள்ள வழித்தடங்களில் செல்லும். இவை அல் ரீம் மால் மற்றும் மெரினா மால் இடையே சேவை செய்கின்றன.

இந்த வழித்தடத்தில் கார்னிச், ஷேக்கா பாத்திமா பார்க், காலிதியா பார்க், கஸ்ர் அல் ஹோஸ்ன், NMC ஸ்பெஷாலிட்டி மற்றும் லைஃப்லைன் மருத்துவமனைகள், ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் மசூதி, கலேரியா அல் மரியா ஐலேண்ட் மற்றும் மெரினா ஸ்கொயர் போன்ற நிறுத்தங்கள் உள்ளன.

ART சேவை இயங்கும் நேரம்:

நவீன ART சேவையானது, வாரத்தின் எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. இவை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

  • ரீம் மாலில் முதல் பயணம் காலை 10 மணிக்கும் கடைசி பயணம் பிற்பகல் 2 மணிக்கும் உள்ளது.
  • மெரினா மாலில் இருந்து காலை 11 மணிக்கும், கடைசிப் பயணம் மாலை 3 மணிக்கும் இயக்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel