ADVERTISEMENT

துபாய்: அடுத்த வாரம் திறக்கப்படவுள்ள குளோபல் வில்லேஜ்..!! மீண்டும் இயக்கப்படும் பிரத்யேக பேருந்து சேவைகள்..!! அறிவிப்பை வெளியிட்ட RTA..!!

Published: 12 Oct 2023, 11:02 AM |
Updated: 12 Oct 2023, 11:34 AM |
Posted By: Menaka

துபாயில் எதிர்வரும் அக்டோபர் 18 அன்று குளோபல் வில்லேஜ் சீசன் 28 கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் நிலையில், பார்வையாளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்க நான்கு பிரத்யேக பேருந்து வழித்தடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த பேருந்து வழித்தடம்  2023-24 ஆண்டுக்கான குளோபல் வில்லேஜ் சீசன் தொடங்கும் அதேநாளில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குளோபல் வில்லேஜுக்கான ஒரு பயணத்திற்கு 10 திர்ஹம் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ரூட் 102: ரஷிதியா பஸ் ஸ்டேஷனில் இருந்து  ஒவ்வொரு மணி நேரமும் இயக்கப்படுகிறது.
  • ரூட் 103: அல் இத்திஹாத் பஸ் ஸ்டேஷனில் இருந்து  ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் கிடைக்கும்.
  • ரூட்104: அல் குபைபா பஸ் ஸ்டேஷனில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் சேவை கிடைக்கிறது.
  • ரூட் 106: மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பஸ் ஸ்டேஷனில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் இயங்கும்.

அதுமட்டுமில்லாமல், குளோபல் வில்லேஜில் எலெக்ட்ரிக் அப்ரா சேவையை RTA மீண்டும் தொடங்க உள்ளது. அந்தவகையில், இரண்டு எலெக்ட்ரிக் அப்ராக்கள் பன்முகக் கலாச்சாரப் பூங்காவின் நீர் கால்வாய் வழியாகப் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் பிரபல குளோபல் வில்லேஜ் முதன் முதலாக 1997 இல் தொடங்கப்பட்டதில் இருந்து இப்போது வரை 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT