ADVERTISEMENT

UAE: மூன்று மாதங்களில் 4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்ட ஷார்ஜா விமான நிலையம்..!! அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து..!!

Published: 25 Oct 2023, 1:15 PM |
Updated: 25 Oct 2023, 1:15 PM |
Posted By: Menaka

ஷார்ஜா விமான நிலையம் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) மட்டும் சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்தைக் கண்டுள்ளது, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 12 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலோபாய தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் முன்னேற்ற நடவடிக்கைகள் காரணமாக, மூன்றாம் காலாண்டில் விமானப் போக்குவரத்து (air traffic) 26,000ஐ எட்டியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், 3,000 டன்களுக்கும் அதிகமான கடல்-விமான சரக்குகள் தவிர, கிட்டத்தட்ட 35,000 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்கான அர்ப்பணிப்பையும், கையாளுதல், கப்பல் போக்குவரத்து மற்றும் சேமிப்பு போன்ற குறிப்பிட்ட கவனம் தேவைப்படும் சரக்கு நடவடிக்கைகளுக்கு விரைவாக பதிலளிக்கும் திறனையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஷார்ஜா விமான நிலைய ஆணையம், பயணிகள் விமான நிலைய சேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் அணுகுவதற்கும், அவர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்கும் அதன் விரிவாக்கத் திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் வழங்குவதன் மூலம் ஷார்ஜா விமான நிலையத்தின் நிலையை உயர்த்தும் முயற்சியில் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel