ADVERTISEMENT

அபுதாபியில் ட்ரோன்கள் மூலம் போஸ்ட் மற்றும் பார்சல்கள் டெலிவரி..!! 2024க்குள் ஒரு ட்ரோன் விமானமாவது செயல்படுத்தப்படும் எனத் தகவல்…

Published: 16 Oct 2023, 7:49 AM |
Updated: 16 Oct 2023, 8:42 AM |
Posted By: Menaka

அபுதாபியில் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே ட்ரோன் மூலம் அஞ்சல் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்யும் விநியோகச் சேவைகளைச் செயல்படுத்த அமீரகத்தின் எமிரேட்ஸ் போஸ்ட் குரூப் (EPG) மற்றும் ட்ரோன் தளமான SkyGo ஆகிய இரு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த கூட்டாண்மையானது, அபுதாபியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனமஸ் வாகனத் தொழில்துறை (Smart & Autonomous Vehicle Industries-SAVI) கிளஸ்டருடன் ஒத்துப்போகிறது என கூறப்பட்டுள்ளது. SAVI ஆனது அபுதாபியை ஸ்மார்ட் மற்றும் ஆட்டோனமஸ் வாகனத் தொழில்துறையில் உலகளாவிய மையமாக நிலைநிறுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன் புள்ளிகள்:

EPG ஆனது எமிரேட்ஸ் போஸ்ட்டால் நிர்வகிக்கப்படும் அஞ்சல் மற்றும் விரைவு கூரியர்களை டெலிவரி செய்யும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த, SkyGo மூலம் இயக்கப்படும் ட்ரோன் புள்ளிகளின் தடையற்ற நெட்வொர்க்கைக் காட்சிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த ட்ரோன் சேவையானது, தொலைதூரப் பகுதிகளுக்கு டெலிவரி செய்வதை கணிசமாக மேம்படுத்தும் என்றும், கார்பன் உமிழ்வு மற்றும் விநியோக நேரங்களைக் குறைத்து, வாடிக்கையாளர்களுக்கும் சமூகங்களுக்கும் சிறப்பாகச் சேவை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எமிரேட்ஸ் போஸ்ட் குழுமத்தின் CEO அப்துல்லா முகமது அலாஷ்ரம் என்பவர் கூறுகையில், SkyGo நிறுவனத்தினுடனான கூட்டாண்மை EPGயின் டெலிவரி செயல்பாடுகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கு உகந்த கார்பன் உமிழ்வு இல்லாத தளவாடங்களாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவரையடுத்து ஸ்கைகோவின் வாரிய உறுப்பினர் மொஹமத் அல் தாஹேரி என்பவர் பேசிய போது, இந்த குறிப்பிடத்தக்க நகரத்திற்கும் அதற்கு அப்பாலும் நாங்கள் பிரகாசமான எதிர்காலத்தை வழங்குகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், EPG மற்றும் SkyGo, நாட்டில் விமான போக்குவரத்து மற்றும் ட்ரோன் பயன்பாடு தொடர்பான அனைத்து தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கும் ட்ரோன் டெலிவரி நடவடிக்கைகள் கட்டுப்படுவதை உறுதி செய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கோ ட்ரோன் ஏர்லைன்:

மேற்கூறியது மட்டுமல்லாமல் EPG மற்றும் உலகின் முதல் சரக்கு ட்ரோன் ஏர்லைனான Dronamics சரக்கு ட்ரோன் சேவையை ஆராய்ந்து சோதனை செய்வதற்கு LoI (Letter of Intent) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த கூட்டாண்மை, தன்னாட்சி சரக்கு ட்ரோன் போக்குவரத்தின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிப்பதாக ஆலாஷ்ரம் கூறியுள்ளார்.

இந்த LoI இன் விதிமுறைகளின் கீழ், UAE மற்றும் GCCயில் ஒரு விரிவான சரக்கு ட்ரோன் டெலிவரி நெட்வொர்க்கை உருவாக்க இரு நிறுவனங்களும் ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், ட்ரோன் டெலிவரி சேவையானது வெற்றிகரமாக செய்யப்பட்டவுடன், EPG இந்த புதுமையான தொழில்நுட்பத்தை அதன் தளவாட நெட்வொர்க்கில் ஒருங்கிணைத்து அதன் நெட்வொர்க்கை மேம்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், LoI ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, EPG 2024 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு ட்ரோன் விமானத்தையாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ப்ரூஃப்-ஆஃப்-கான்செப்ட் (POC) விமானங்களை நடத்துவதற்கு அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் வணிகத்தின் மூலம் ட்ரோனாமிக்ஸை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel