அமீரக செய்திகள்

UAE: இனி சுற்றுலாப்பயணிகள் எளிதாக VAT பணத்தைத் திரும்பப் பெறலாம்!! புதிய ஆப் அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் வரி ஆணையம் (Federal Tax Authority-FTA), சுற்றுலாப் பயணிகள் (value-added tax-VAT) வரித் தொகையை திரும்பப் பெறுவதை மிகவும் எளிதாக்குவதற்காக ‘Tourist Refund’ என்ற புதிய ஸ்மார்ட் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆப் முற்றிலும் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேட்டட் முறையில் செயல்படுவதால், பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை மற்றும் அச்சிடப்பட்ட காகித ரசீதுகள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த நவீன டிஜிட்டல் சேவையானது, தற்போது துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்று வரும் Gitex Global என்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சுற்றுலாப் பயணிகள் இந்த செயலியை FTA சேவைகள் வழங்கும் நிறுவனமான பிளானட் மூலம் பதிவிறக்கலாம்.

ஒரு சுற்றுலாப் பயணி அமீரக ஸ்டோரிலிருந்து ஏதேனும் பொருளை வாங்கும் போது, ​​கடைக்காரர் இன்வாய்ஸை ஸ்கேன் செய்வார் மற்றும் அது செயலியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு சுற்றுலாப்பயணி வாங்கிய ஒவ்வொரு பரிவர்த்தனை மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் போது அவர் பெறக்கூடிய VAT தொகை பற்றிய தகவல்களும் இந்த செயலியில் பதிவாகி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய ஆப் குறித்து FTA இன் வரி செலுத்துவோர் சேவைகள் துறையின் இயக்குனர் சாஹ்ரா அல் தஹ்மானி அவர்கள் விவரிக்கையில், சுற்றுலாப் பயணி நாட்டை விட்டு வெளியேறும்போது, தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக விமான நிலையத்தில் நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, செயலியில் பதிவாகியுள்ள இன்வாய்ஸ்களைக் காண்பித்து எளிதாக VAT தொகையைத் திரும்பப் பெறலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

FTAவின் ‘Tourist Refund’ ஆப் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கிறது மற்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் சாதனங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப், வெவ்வேறு வரி விதிக்கக்கூடிய நபர்கள், வரி செலுத்துவோர் வரி முகவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டுக் கட்டுமானம் தொடர்பாக FTA இலிருந்து பணத்தைத் திரும்பப் பெற உரிமையுள்ள அனைத்து சேவைகளையும் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 2018 ஆம் ஆண்டில் நுகர்வோர் பொருட்கள் மீது 5% VAT வரியை அமல்படுத்தியது. இருப்பினும், தரை வழி, கடல் வழி மற்றும் வான்வழியாக நாட்டை விட்டு வெளியேறும் போது சுற்றுலாப் பயணிகள் இந்த வரி பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அறிவித்தது.

அந்த வகையில், புதிய ஆப் (VAT) வரியை திரும்பப்பெறுவதை விரைவுபடுத்துவது மட்டுமில்லாமல், பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நேரத்தை 20 வேலை நாட்களில் இருந்து வெறும் ஐந்தாகக் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!