ADVERTISEMENT

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் அமீரகம்..! 200 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு..!! வறுமையை ஒழிக்கும் நோக்கில் நடவடிக்கை…!!

Published: 17 Oct 2023, 9:01 AM |
Updated: 17 Oct 2023, 9:06 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவாக சுமார் 200 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மொராக்கோவின் மராகேஷில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2023 ஆண்டு கூட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்தவகையில் அமீரகம் வழங்கும் நிவாரணம், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அதிக பணவீக்கம், உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்து வரும் கடன் அபாயம் போன்ற சவால்களை எதிர்கொள்ள வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த நிதியுதவி உலகெங்கிலும் உள்ள வறுமையை ஒழிப்பதற்கான ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது தொடர்பாக நிதி விவகாரங்களுக்கான இணையமைச்சர் முகமது அல் ஹுசைனி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம், அமீரகத்தின் தலைவரான ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் தலைமையின் கீழ், துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித்தின் வழிகாட்டுதலின் கீழ், ஐநாவின் SDGகளை (2030க்குள் வறுமையை ஒழித்து உலக மக்களின் அமைதியை உறுதி செய்வதற்கான ஐநாவின் அழைப்பு) எல்லாவகையிலும் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது சர்வதேச மனிதாபிமான முன்முயற்சிகளை ஆதரிப்பதில் அமீரகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களில் முதல் முறையாக ஆப்பிரிக்காவில் உலக வங்கி குழுமம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து வருடாந்திர கூட்டத்தை நடத்துவது, 189 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு, வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் திரு அல் ஹுசைனி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மீட்டிங் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய அல் ஹுசைனி, அமீரகத்தின் நிதியுதவி இப்போது மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு ஒரு முக்கிய நிதி, வணிக மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையமாக உள்ளது. இதனால் அதன் பொருளாதாரத்தை அந்த நாடுகளின் பொருளாதாரங்களுடன் இணைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel