அமீரக செய்திகள்

அமீரகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடையை விதிக்கும் மற்றுமொரு எமிரேட்..!! ஜனவரி முதல் அமல்..!!

அமீரகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு பெரும்பாலான எமிரேட்டுகள் தடை விதித்துள்ள நிலையில் ராஸ் அல் கைமா எமிரேட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மீதான தடை ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளுக்கு அமீரகம் முழுமையான தடைக்கு ஏற்ப வருவதாக எமிரேட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Environment Protection and Development Authority-Epda) விவரித்துள்ளது.

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி அவர்களால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் சட்ட எண்.4 இன் படி, அடுத்த ஆண்டு முதல் எமிரேட்டில் இந்த பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு மற்றும் புழக்கம் இரண்டும் தடைசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தின் தேசிய நிலைத்தன்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி 2024 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான முழுமையானத் தடையை அமீரகம் அமல்படுத்த உள்ளது. மேலும், இந்த பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் புழக்கத்திற்கும் தடை விதித்துள்ளது.

இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 2026 இல், பிளாஸ்டிக் பைகள் மட்டுமின்றி, பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கட்லரிகள், கொள்கலன்கள் மற்றும் பெட்டிகள் போன்ற பிற தயாரிப்புகளுக்கும் தடை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

நாட்டில் உள்ள மற்ற ஐந்து எமிரேட்டுகள் ஏற்கனவே பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை அறிவித்துள்ளன. அபுதாபியில், ஜூன் 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கான தடை அமலுக்கு வந்தது, அதே நேரத்தில் துபாயில் சில்லறை விற்பனையாளர்கள் ஜூலை 1, 2022 முதல்,  ஒரு பைக்கு 25 ஃபில்ஸ் வசூலிக்கின்றனர்.

அதேபோல், ஷார்ஜாவில் அக்டோபர் 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு 25-ஃபில் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஜனவரி 1, 2024 முதல் தடை அமலுக்கு வர உள்ளது. உம் அல் குவைன் மற்றும் அஜ்மானும் 2023 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!