ADVERTISEMENT

அமீரகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் 3 மாத இழப்பீடு தொகை கேட்க முடியுமா..?? சட்டம் சொல்வது என்ன..??

Published: 28 Oct 2023, 6:45 PM |
Updated: 28 Oct 2023, 6:47 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள ஒரு ஊழியர் அவரது வேலை ஒப்பந்தத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டால், மூன்று மாத இழப்பீடு வழங்குவது தொடர்பாக முதலாளியிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? அமீரகத்தில் வேலைவாய்ப்பு உறவுகள் எந்தளவிற்கு தரமானதாக இருக்கும் என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.

ADVERTISEMENT

பொதுவாக, அமீரகத்தில் ஒரு ஊழியர் வேலையில் பணியமர்த்தப்படுவதற்கு முதலாளி மற்றும் ஊழியர் பணி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும். இது 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 ன் 10 வது பிரிவுடன் படிக்கப்பட்ட வேலைவாய்ப்புச் சட்டத்தின் 8 வது பிரிவுக்கு இணங்க உள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 10(2)இல் கூறப்பட்டுள்ள படி, நாட்டில் ஒரு முதலாளியும் ஊழியரும் வேலை ஒப்பந்தத்தில் கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சேர்க்க ஒப்புக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

அந்தவகையில், ஊழியருக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான பணி ஒப்பந்தத்தில் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கூடுதல் விதிகளை சேர்க்கப்படலாம்.

ஆனால், அந்த பணி ஒப்பந்தமானது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அதன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையான வேலை வாய்ப்புகளளாக இருக்க வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டின் மந்திரி ஆணை எண். 46 இன் பிரிவு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், 2022 ஆம் ஆண்டின் மந்திரி ஆணை எண். 46 இன் பிரிவு 2 (1) இன் படி, எந்தவொரு பணியாளரையும் பணியமர்த்த விரும்பும் ஒரு முதலாளி பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தவும்.
  • வேலைவாய்ப்பில் (job offer) குறிப்பிடப்பட்டுள்ளதை விட ஒப்பந்தத்தில் (contract) பணியாளருக்கு கூடுதல் நன்மைகளைச் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
  • அதேநேரத்தில், சட்டத்தின் விதிகள் மற்றும் அதன் நிர்வாக ஒழுங்குமுறைகளுடன் முரண்படாத வகையில் ஒப்பந்தத்தில் கூடுதல் இணைப்புகளைச் சேர்ப்பதும் அனுமதிக்கப்படுகிறது.

ஆகவே, மேற்கூறிய சட்ட விதிகளின்படி, ஊழியர் ஒருவர் முதலாளியால் பணிநீக்கம் செய்யப்பட்டால், இழப்பீடாக மூன்று மாதச் சம்பளத்தைப் பெறலாம் என்று வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கூடுதல் ஷரத்தை சேர்க்குமாறு அவரது வருங்கால முதலாளியிடம் கோரலாம்.

அப்படி கோரும் போது, முதலாளி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், ஊழியர் சரியான காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டால், வேலைவாய்ப்பு சட்டத்தின் 47 வது பிரிவின்படி, தன்னிச்சையான பணிநீக்கத்திற்காக மூன்று மாத சம்பளம் வரை இழப்பீடு கோரலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel