அமீரக செய்திகள்

UAE: பங்கேற்பாளர்கள் அனைவரும் மில்லியனர் ஆகும் புதிய சேமிப்புத் திட்டம்.. அறிமுகம் செய்த நேஷனல் பாண்ட்ஸ்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று கடந்த அக்டோபர் 2ம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய சேமிப்புத் திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்கள் தவணைக்காலத்தின் முடிவில் ஒருங்கிணைந்த சேமிப்பு மற்றும் ஒட்டுமொத்த லாபத்தில் 1 மில்லியன் திர்ஹம் வரை பயன்பெறலாம் என்று கூறப்படுகிறது.

அமீரகத்தின் சேமிப்பு மற்றும் முதலீட்டு நிறுவனமான நேஷனல் பாண்ட்ஸ் (National Bonds) அறிவித்துள்ள ‘My One Million’ என்ற இந்த புதிய திட்டம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இதில் மூன்று முதல் 10 ஆண்டுகள் வரையிலான குத்தகை காலத்தை பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யலாம் என்றும், அத்துடன் மொத்தமாக முதலீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சார்பாக பங்களிக்கும் விருப்பத்தையும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேஷனல் பாண்ட்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில், ‘My One Million’ சேமிப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபரும் மில்லினியராக மாற முடியும் என்று உறுதியளித்துள்ளார்.

பதிவு செய்வதற்கான வழிமுறை:

இத்திட்டத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள், நேஷனல் பாண்ட்ஸ் நிறுவனத்தின் எந்த கிளைகளிலும் அல்லது ஆப் மூலம் பதிவு செய்யலாம். அவர்கள் மாதாந்திர பங்களிப்பை அமைப்பதற்கு முன், முதலில் திட்டத்தின் கால அளவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக, ஆரம்ப சேமிப்புத் தொகையைச் செலுத்துவதற்கான விருப்பமும் அவர்களுக்கு உள்ளது.

மாதாந்திர பங்களிப்பு என்றால் என்ன?

எடுத்துக்காட்டாக, குடியிருப்பாளர் ஒருவர் 10 ஆண்டு காலவரையறையை தேர்வு செய்கிறார் என்றால், மாதாந்திரம் செலுத்த வேண்டிய தொகை 7,160 திர்ஹம்களாக இருக்கும். இந்த தொகையை பத்து ஆண்டுகள் செலுத்தினால் மொத்தம் அவர் 859,200 திர்ஹம் வரை சேமிப்பார் மற்றும் 140,800 வரையிலான லாபத்தைப் பெறுவார், ஆக மொத்தம் 1 மில்லியன் திர்ஹம் வரை அவர் பெற்றுக்கொள்வார்.

இதேபோல், மூன்று ஆண்டு திட்டத்தில் சேமிக்கும் பங்கேற்பாளர், 26,540 திர்ஹம்களுடன் மாதாந்திர பங்களிப்பு செய்யும் போது, நிகர லாபத்துடன் மூன்று ஆண்டுகளில்   44,560 திர்ஹம் தொகையை பெறுவார். மேலும் இது குறித்த விபரங்களை அறிந்து கொள்ள நேஷனல் பாண்ட்ஸின் இணையதளத்தை பார்வையிடலாம்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!