ADVERTISEMENT

அமீரகத்தில் சில நாட்களாக தொடரும் கனமழை..!! குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…

Published: 25 Oct 2023, 9:37 AM |
Updated: 25 Oct 2023, 9:39 AM |
Posted By: Menaka

கடந்த சில நாட்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு இடைவிடாது கொட்டித் தீர்க்கும் மழை, மற்றும் அதன் விளைவாக ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் நிரம்பி ஏற்படும் வெள்ளப்பெருக்கு  என சமூக ஊடகங்களில் மழை தொடர்பான ஏராளமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

குறிப்பாக, ஷார்ஜாவில் உள்ள அல் ஃபயா பகுதியில் கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ X தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

அரபிக் கடலில் உருவாகியுள்ள தேஜ் புயலின் காரணமாக, நாட்டின் கிழக்குப் பகுதிகள் சீரற்ற வானிலையை எதிர்கொள்ளும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதேபோல், ஃபுஜைராவின் வடக்கில் உள்ள ஒரு பகுதியை ஆலங்கட்டி மழை தாக்கியுள்ளது. இதை வீடியோ எடுத்த நபர், கீழே சிதறிக்கிடக்கும் பனிக் கட்டிகளை கையில் எடுத்து கேமராவுக்குக் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.


மற்றொரு வீடியோ கிளிப்பில், மலைப்பாங்கான சாலையில் கனமழைக்கு மத்தியில் வாகனங்கள் செல்வதைக் காணலாம்.

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 27, வெள்ளிக்கிழமை வரை மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, குடியிருப்பாளர்கள் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரம் வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்டின் பெரும்பாலான பகுதிகளை கனமழை தொடர்ந்து தாக்கி வருவதால் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் வழங்கியுள்ளனர்.

மேலும், இத்தகைய வானிலையின் போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி மெதுவாக செல்ல வேண்டும் என்றும், மீறினால் அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel