ADVERTISEMENT

UAE: உம் அல் குவைனின் முக்கிய சாலை தற்காலிகமாக மூடல்..!! மாற்றுப்பாதையில் ஸ்பீட் கேமரா பொருத்தப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…!!

Published: 14 Oct 2023, 10:49 AM |
Updated: 14 Oct 2023, 12:20 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் எமிரேட்டுகளுக்கு இடையே செல்லும் ஒரு முக்கிய சாலையானது மூடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது உம் அல் குவைனில் உள்ள முக்கிய சாலை தற்காலிகமாக மூடப்படுவது குறித்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மாற்றுப்பாதையில் புதிதாக ஸ்பீட் லிமிட் கேமரா பொருத்தப்படும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், எதிர்வரும் அக்டோபர் 17 அன்று அல் அகார்ன் எக்ஸிட் மற்றும் அல் ஷுஹாதா பிரிட்ஜ் இடையே ராஸ் அல் கைமாவில் இருந்து ஷார்ஜா நோக்கி செல்லும் E611 எமிரேட்ஸ் சாலை தற்காலிகமாக மூடப்படுவதால், போக்குவரத்து மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அந்த பதிவில், ராஸ் அல் கைமாவிலிருந்து ஷார்ஜாவை நோக்கிய எமிரேட்ஸ் சாலையில், அல் அகார்ன் ஏரியா, எக்ஸிட் 95 மற்றும் அல் ஷுஹாதா பிரிட்ஜ், ராஸ் அல் கைமா ஆகியவற்றின் இன்டெர்செக்ஷன்களுக்கு இடையில் ஒரு மாற்றுப்பாதை இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், அந்த மாற்றுப்பாதையில் ஸ்பீட் லிமிட் கேமரா பொருத்தப்படும் என்றும், எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel