ADVERTISEMENT

அபுதாபியில் அனைத்து விமான சேவைகளும் புதிய டெர்மினலுக்கு மாற்றம்..!! ஆண்டுதோறும் 45 மில்லியன் பயணிகளைக் கையாளும் எனத் தகவல்…

Published: 15 Nov 2023, 8:34 PM |
Updated: 15 Nov 2023, 8:38 PM |
Posted By: Menaka

அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையமான டெர்மினல் A-ல் இருந்து கடந்த நவம்பர் 1 ம் தேதி முதல் குறிப்பிட்ட சில விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில்  இன்று (நவம்பர் 15, புதன்) முதல் அனைத்து விமான நிறுவனங்களும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் (AUH) புதிய டெர்மினல் A இலிருந்து முழுமையாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 28 விமான நிறுவனங்கள் புதிய டெர்மினலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆபரேட்டரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த வெற்றிகரமான மாற்றம், விமானப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்றும், புதிய டெர்மினல் ஆண்டுதோறும் 45 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்றும் ஏர்போர்ட் ஆப்பரேட்டர் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 79 விமானங்களைக் கையாளக் கூடிய புதிய விமான நிலையத்தின் அதிநவீன வசதிகளை, 12,220 விமானங்களில் பயணம் செய்யும் 2.29 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் டிசம்பரில் அனுபவிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே, நவம்பரின் முதல் இரண்டு வாரங்களில் 1,557 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படும் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 7,600க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபி ஏர்போர்ட்ஸின் நிர்வாக இயக்குநரும், இடைக்கால CEO ஆன எலினா சோர்லினி என்பவர் கூறுகையில், அனைத்து விமான நிறுவனங்களும் இப்போது டெர்மினல் A இல் இருந்து முழுமையாக இயக்கப்படுவதால், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் செயல்படுவதற்கான புதிய சகாப்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

 

டெர்மினல் A இப்போது அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு சேவை செய்யும் முதன்மையான பகுதியாகும். இதன் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா பிப்ரவரி 9, 2024 அன்று நடைபெறும். அதன்பிறகு, இது சையத் சர்வதேச விமான நிலையம் (Zayed International Airport) என்று மறுபெயர் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel