ADVERTISEMENT

85 மில்லியன் பயணிகளை வரவேற்க காத்திருக்கும் DXB..!! முதல் ஆறு மதங்களில் மட்டும் 41.6 மில்லியன் பயணிகளைக் கண்டு சாதனை…

Published: 6 Nov 2023, 7:58 PM |
Updated: 6 Nov 2023, 8:00 PM |
Posted By: Menaka

அதிகளவு மக்கள் பயணிக்கக்கூடிய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இருக்கின்றது. அதிகளவு சுற்றுலா பயணிகள் துபாய்க்கு தொடர்ந்து வருகை தருவதும் அத்துடன் உலகளவில் வெகு தூரம் பயணிக்கக்கூடிய விமானங்களுக்கான டிரான்ஸிட் இடமாக துபாய் விளங்குவதாலும் துபாய் விமான நிலையமானது பொதுவாகவே பிஸியுடன் காணப்படும்.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு துபாய் அரசும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை வழங்கி பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான போக்குவரத்தை வழங்கி வருகின்றது. இது ஒருபுறமிருக்க பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதிலும் துபாய் விமான நிலையமானது முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் (DXB) நடப்பு ஆண்டில் சுமார் 85 மில்லியன் பயணிகளை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது DXB ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் DXB ஆனது, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பயணிகள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 85 மில்லியன் பயணிகளை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் துபாய் கஸ்டம்ஸின் (Dubai Customs) இயக்குநர் ஜெனரல், துறைமுகங்கள், சுங்கம் மற்றும் இலவச மண்டல கார்ப்பரேஷனின் CEO அஹ்மத் மஹ்பூப் முசாபிஹ் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் கஸ்டம்ஸ் விமான நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக ஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் திறமையான அதிகாரிகளை வழங்குவதன் மூலம் துபாயில் சுற்றுலாத் துறையின் சிறந்த செயல்திறனுடன் தொடர்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

DXB யின் பயணிகள் போக்குவரத்து:

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான DXB, துபாயை உலகளாவிய சுற்றுலா மையமாக ஆதரிப்பதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மூலோபாய கூட்டாளர்களிடையே ஒத்துழைப்பைக் கோருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மற்றும் உச்சகட்டப் பயணங்களின் போது, பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு, முன்கூட்டியே தயார்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், துபாய் சுங்கத்துறையின் பயணிகள் செயல்பாட்டுத் துறையின் செயல் இயக்குநர் காலித் அகமது அவர்கள், குளிர்கால சுற்றுலாப் பருவத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளுக்கு திறமையான மற்றும் தரமான சுங்கச் சேவைகளை வழங்குவதற்கான தங்கள் அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, துபாய் கஸ்டம்ஸால் உருவாக்கப்பட்ட லக்கேஜ் பரிசோதனைக்கான மேம்பட்ட ஆய்வு அமைப்புகள் மூலம், அதிகாரிகள் விரைவாகவும் பயணிகளுக்கு தாமதங்கள் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தாமலும் சோதனை செய்ய அனுமதிக்கிறது என்பதை எடுத்துரைத்துள்ளார்.

அதேபோல், நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் DXB டெர்மினல் 3க்கு வந்த 65,000க்கும் மேற்பட்ட விமானங்களில் துபாய் கஸ்டம்ஸ் 16 மில்லியனுக்கும் அதிகமான லக்கேஜ்களை கையாண்டதாக டெர்மினல் 3 இன் இயக்குநர் கலீஃபா பின் ஷாஹின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். அதே காலகட்டத்தில் சுங்கம் மற்றும் குற்றவியல் வழக்குகள் உட்பட 504 வழக்குகளை ஆய்வாளர்கள் கையாண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திக ள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel