அமீரக செய்திகள்

துபாய்: 566 சலூன்களில் அதிரடியாக ஆய்வுப் பிரச்சாரத்தை நடத்திய முனிசிபாலிட்டி!! துபாய் முழுவதும் ஆய்வு தொடரும் என்று அறிவிப்பு….

துபாய் முழுவதும் உள்ள ஆண்கள் சலூன்கள் மற்றும் அழகு மையங்களில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தரங்களைக் கண்காணிப்பதற்காக துபாய் முனிசிபாலிட்டி ஆய்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 2023இல் தொடங்கப்பட்ட இந்த ஆய்வுப் பிராச்சாரம், பொது சுகாதார பாதுகாப்பு மற்றும் மேம்பாடு மற்றும் சிறந்த பொது மற்றும் தொழில்முறை பாதுகாப்பு தரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சலூன்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், உபகரணங்களை சுத்தம் செய்வதன் அவசியம் போன்றவற்றை எடுத்துரைப்பது இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த பிரச்சாரம் கடந்த மாதங்களில், எமிரேட்டின் 47 வெவ்வேறு பகுதிகளில் 566 சலூன்களில் நடத்தப்பட்டது. இது சலூன்கள் அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் சிறந்த நடைமுறைகளையும் கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்கிறது.

கூடுதலாக, கருவிகளின் தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கருவிகள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்கிறது.

மேலும், எமிரேட்டில் உள்ள 2,965 ஆண்கள் சலூன்களை மதிப்பிடுவதற்காக துபாயின் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் தொடரும் என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் எந்தவொரு முறைகேடுகளையும் புகாரளிப்பதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு துபாய் முனிசிபாலிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான அனைத்து புகார்கள் மற்றும் விசாரணைகளுக்கு 800900 என்ற முனிசிபாலிட்டியின் கால் சென்டர் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இது 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் இருக்கும்.

இந்த பிரச்சாரமானது, துபாய் நகராட்சியின் மிக உயர்ந்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் முன்னணி உலகளாவிய நகரமாக துபாயை நிலைநிறுத்துவதற்கு பங்களிக்கும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!