ADVERTISEMENT

துபாய்: வீட்டில் இருந்தபடியே இலவசமாக குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம்!!! எப்படி செய்வது?

Published: 5 Nov 2023, 4:44 PM |
Updated: 5 Nov 2023, 8:19 PM |
Posted By: Menaka

துபாயில் கழிவுமேலாண்மையை மேம்படுத்த மறுசுழற்சி போன்ற முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொருட்களை மறுசுழற்சி செய்வதில் குடியிருப்பாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவமாகும். ஆகவே, எமிரேட்டில் மேற்கொள்ளப்படும் மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு குடியிருப்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு குடியிருப்பாளரும் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்கள், பத்திரிக்கைகள் அல்லது செய்தித்தாள்கள் போன்றவற்றை வீட்டில் இருந்த படியே எளிதாக மறுசுழற்சி செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘Dubai Now’ செயலியை பதிவிறக்கி, அதில் பிக்-அப் தேதியை கொடுப்பதுதான்.

துபாய் குடியிருப்பாளர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்குக் கிடைக்கும் ‘Dubai Now’ செயலி மூலம், 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து 170க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை சேவைகளை அணுக முடியும்.

ADVERTISEMENT

Dubai Now செயலியில் உள்ள பல சேவைகளில் ‘Go Green’ சேகரிப்பு இயக்கமும் ஒன்றாகும், நிலைத்தன்மை மற்றும் மறுசுழற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட  இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது.

துபாயில் இலவச மறுசுழற்சி சேவைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

உங்களிடம் UAE PASS கணக்கு இருந்தால் மட்டுமே, நீங்கள் ‘Dubai Now’ செயலியை அணுக இயலும். எனவே, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பின்வரும் படிகளைப் பின்பற்றி இலவச மறுசுழற்சி சேவையைப் பெறலாம்:

ADVERTISEMENT

படி 1: ‘Dubai Now’ செயலியில் உள்நுழையவும்

  • Google Play store அல்லது Apple App Store இலிருந்து ‘Dubai Now’ பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • அடுத்து, உங்களின் UAE பாஸ் கணக்கு மூலம் உள்நுழையவும். உங்களிடம் கணக்கு  இல்லையென்றால், ‘Create a UAE Pass Account’ என்பதைத் தட்டவும்.
  • பயன்பாட்டின் முகப்புப் பக்கத்தில், ‘Social’  என்ற வகையைத் தேர்ந்தெடுத்து, ‘Go Green’ என்பதைத் தட்டவும்.

படி 2: விண்ணப்ப விவரங்களை நிரப்பவும்

  • நீங்கள் UAE PASS மூலம் உள்நுழைந்துள்ளதால், உங்கள் முழுப்பெயர் மற்றும் மொபைல் எண் தானாகவே உள்ளிடப்படும்.
  • அடுத்து, பிக்-அப் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் மறுசுழற்சி செய்ய விரும்பும் பொருளின் தோராயமான எடையை உள்ளிட்டு மற்றும் ஒரு சிறிய விளக்கத்தைச் சேர்க்கவும்.
  • ‘Continue’ பட்டனை கிளிக் செய்யவும்.
  • மேப்பில் இருந்து உங்கள் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடல் பட்டியில் இருப்பிடத்தை உள்ளிடவும். இறுதியாக, ‘Confirm Address’ என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்

  • மேற்கூறிய விவரங்களை உள்ளிட்டதும், உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்
  • பிறகு, உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதற்கான அறிவிப்பைப் பெறுவீர்கள், மேலும் ஆதார் எண்ணையும் பெறுவீர்கள்.

பிக் அப் நேரம் என்ன?

துபாய் நவ்-இன் படி,  பிக்-அப் நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும், மேலும் உங்கள் விண்ணப்பத்தைச் செயல்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel