அமீரக செய்திகள்

நாளை நடைபெறவுள்ள துபாய் ரன்: மூடப்படும் சாலைகள், மாற்று வழிகள், பங்கேற்பாளர்கள் செல்ல வேண்டிய இடங்கள் போன்ற விபரங்கள் உள்ளே..!!

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன் நாளை (நவம்பர் 26) ஷேக் சையத் சாலையை அதன் ஓட்டப்பாதையாக ஆக்கிரமிக்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான உடற்பயிற்சி ஆர்வலர்கள் இதில் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர்.

இந்த மாபெரும் நிகழ்வில் நீங்களும் பங்கேற்கிறீர்கள் என்றால், கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

உங்கள் பிப்களை (bib) சரியான நேரத்தில் சேகரிக்க வேண்டும்:
நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், வேர்ல்ட் டிரேட் சென்டருக்கு அருகிலுள்ள ரன் அண்ட் ரைடு சென்ட்ரலில் இருந்து உங்கள் பிப்களை சேகரிக்க வேண்டும். இது இல்லாமல் துபாய் ரன்னில் பங்கேற்க முடியாது. இன்றுடன் (நவம்பர் 25) பிப் விநியோகம் முடிவடைகிறது.

துபாய் ரன் தொடங்கும் நேரம்:

துபாய் ரன் நாளை (நவம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 முதல் 9.30 வரை நடைபெறும். 10 கிமீ மற்றும் 5 கிமீ என இரண்டு பாதைகளில் ஓட்டப்பந்தயம் நடத்தப்படும்.

எப்படி செல்வது?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA),  துபாய் ரன்னில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

மெட்ரோ

நீங்கள் 5 கிமீ ஓட்டத்தில் பங்கேற்கிறீர்கள் என்றால், அருகிலுள்ள மெட்ரோ நிலையம் வேர்ல்ட் டிரேட் சென்டர்  அல்லது ரெட் லைனில் உள்ள மேக்ஸ் நிலையம் ஆகும். நீங்கள் 10 கிமீ ஓட்டத்தில் பங்கேற்கிறீர்கள் என்றால், துபாய் மெட்ரோ நிலையம் எமிரேட்ஸ் டவர்ஸ் நிலையமாக இருக்கும்.

கார் 

நீங்கள் காரில் செல்ல விரும்பினால், 10 கிமீ பாதையில் துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டர் கார் பார்க்கிங் ஒன்றில் அல்லது 5 கிமீ பாதையில் துபாய் மால் கார் பார்க்கிங்கில் உங்கள் காரை நிறுத்தலாம், பின்னர் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தி தொடக்கப் பாதைக்குச் செல்லவும்.

சாலை மூடல்கள்

துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலை (SZR) நவம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 9:30 மணி வரை மூடப்படும் என்று RTA அறிவித்துள்ளது. மேலும், SZR இல் உள்ள சர்வீஸ் சாலைகள் நவம்பர் 25, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மூடப்படும். எனவே, இந்த நேரங்களில் பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாற்று வழிகள்

  • அல் வாசல் ஸ்ட்ரீட்
  • அல் கைல் ரோடு
  • அல் மேதான் ஸ்ட்ரீட்
  • அல் அசாயல் ஸ்ட்ரீட்
  • 2வது ஜபீல் ஸ்ட்ரீட்
  • 2வது டிசம்பர் ஸ்ட்ரீட்
  • அல் ஹதிகா ஸ்ட்ரீட்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!