அமீரக செய்திகள்

அமீரக தேசிய தினம்: போக்குவரத்து விதிமீறல்களுக்கு 50% தள்ளுபடியை அறிவித்த மூன்றாவது எமிரேட்….

ஐக்கிய அரபு அமீரகம் வரவிருக்கும் டிசம்பர் 2 ஆம் தேதி அதன் 52வது தேசிய தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், ஃபுஜைரா காவல்துறை போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி, போக்குவரத்து புள்ளிகளை (black points) ரத்து செய்தல் போன்றவற்றை அறிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 30 ஆம் தேதி முதல் 52 நாட்களுக்கு, கடுமையான விதிமீறல்கள் என வரையறுக்கப்பட்டவற்றை தவிர மற்ற அனைத்து விதிமீறல்களுக்கும், இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. மேலும், நவம்பர் 30, 2023க்கு முன் புரிந்த விதிமீறல்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இரண்டு எமிரேட்டுகளும் யூனியன் தினத்தை முன்னிட்டு அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஃபுஜைரா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் பின் கானெம் அல் காபி அவர்கள் கூறுகையில், குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றும் அவர்களின் போக்குவரத்து பரிவர்த்தனைகளை எளிதாக முடிக்க உதவும் முன்முயற்சிகளை செயல்படுத்த புஜைரா காவல்துறை ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர் கர்னல் சலேஹ் முஹம்மது அல்-தன்ஹானிஅவர்கள், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விதிமீறல்களுக்கான கட்டணத்தை விரைவாக செலுத்தவும், இந்த காலகட்டத்தில் தள்ளுபடியிலிருந்து பயனடையவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!