ADVERTISEMENT

துபாயில் இன்று பெய்த கனமழை..!! குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்ட வானிலை மையம்..!!

Published: 25 Nov 2023, 2:53 PM |
Updated: 25 Nov 2023, 2:53 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), நேற்று இரவும் இன்று காலையும் மழை பெய்யும் என்று முன்னதாக கணித்திருந்த நிலையில், இன்றைய தினம் நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் மட்டுமின்றி, ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் அபுதாபியிலும் இடியுடன் கூடிய மழை பெய்து, பள்ளத்தாக்குகள் நிரம்பி அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, NCM நாட்டின் சில பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது மற்றும் பாதகமான வானிலையின் போது வெளிப்புறம் செல்வதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்லும் போது, ​​நிலையற்ற வானிலை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், திடீர் வெள்ளம் மற்றும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் NCM அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், சீரற்ற வானிலையின் போது, எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ள வேக வரம்புகளைப் பின்பற்றுமாறும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், பகல் நேரத்தில் கடலோர, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என்று எச்சரித்துள்ள NCM, நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் மலைப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 11ºC ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 31ºC ஆகவும் பதிவாகலாம்.

NCM வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, இரவில் வானிலை ஈரப்பதமாகவும், ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதே போல் சில உள் பகுதிகளில் மூடுபனி உருவாகும் நிகழ்தகவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில், லேசானது முதல் மிதமான காற்று தூசி மற்றும் மணலை வீசும் என்று கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel