ADVERTISEMENT

துபாயிலிருந்து ஹத்தாவிற்கு செல்ல ‘ஹத்தா எக்ஸ்பிரஸ் பஸ்’.. 2 மணி நேரத்திற்கு ஒரு பஸ் புறப்படும் என RTA தகவல்..!!

Published: 2 Nov 2023, 2:11 PM |
Updated: 2 Nov 2023, 2:11 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான ஹத்தா ஹெரிட்டேஜ் வில்லேஜ், ஹத்தா அணை மற்றும் ஹத்தா நீர்த்தேக்கம் போன்ற பசுமையான இடங்களை உள்ளடக்கிய துபாயின் ஹத்தாவிற்கு சென்று சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்கு, மலிவான மற்றும் விருப்பமான தேர்வாக ஹத்தா எக்ஸ்பிரஸ் பஸ் (H02) உள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) பொதுமக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையின் மூலம், பயணிகள் துபாயிலிருந்து ‘துபாயின் ஹைலேண்ட்ஸ்’ என்றழைக்கப்படும் ஹத்தாவிற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம்.

ADVERTISEMENT

ஹத்தா எக்ஸ்பிரஸ் பஸ்ஸை எங்கே காணலாம்?

துபாய் மாலின் பிரதான நுழைவாயிலில் உள்ள சுற்றுலா பார்க்கிங் பகுதி எண்.2 இல் ஹத்தா எக்ஸ்பிரஸ் பேருந்து நிறுத்தத்தை காணலாம். இந்த பஸ் பச்சை மற்றும் நீல நிறத்தில் ஜொலிக்கும் என்பதால், நீங்கள் இந்த பஸ்ஸை எளிதாகக் கண்டறியலாம். இந்த ஹத்தா எக்ஸ்பிரஸ் (H02), உங்களை துபாய் மாலில் இருந்து ஹத்தாவில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் 55 நிமிடங்களில் அழைத்துச் செல்லும்.

பஸ் நேரங்கள்:

பயணிகள் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த பேருந்து சேவையை அணுகலாம். குறிப்பாக, துபாய் மால் ஸ்டேஷனில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த ஹத்தா எக்ஸ்பிரஸ் பஸ் புறப்படும்.

ADVERTISEMENT

பயணக் கட்டணம்:

இந்த பஸ்ஸில் 25 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் முழு பயணத்தையும் முடிக்க உங்கள் நோல் கார்டில் சுமார் 60 திர்ஹம்ஸ் இருப்பு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் குழுவாக பயணம் செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் சொந்த நோல் கார்டு தேவைப்படும்.

ஹத்தா முழுவதும் பயணிக்க பேருந்து சேவை கிடைக்கிறதா?

இந்த ஹத்தா எக்ஸ்பிரஸ் பேருந்து துபாய் மாலில் இருந்து ஹத்தா பேருந்து நிலையத்திற்கு மட்டுமே பயணிகளை அழைத்துச் செல்கிறது. ஆனால், ‘Hop On and Off’ என்ற RTA பேருந்து சேவை ஹத்தாவில் உள்ள அனைத்து பிரபலமான சுற்றுலாத் தலங்களிலும் கிடைக்கும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு கிடைக்கும் இந்த சேவையில் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel