ADVERTISEMENT

ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய தனியார்துறை ஊழியர்களுக்கு அனுமதி!! சவூதி அமைச்சகம் தகவல்…!!

Published: 27 Nov 2023, 4:03 PM |
Updated: 27 Nov 2023, 4:03 PM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவில் உள்ள தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வதற்கு அனுமதியளிக்கப்படுவதாக சவூதி மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய விரும்பும் தொழிலாளர்கள், அவர்களின் பணி ஒப்பந்தம் மற்றும் பணிபுரியும் நிறுவனங்களின் விதிமுறைகளில் இரண்டு வேலைகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் காலவரையறை இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

சவுதி அரேபியா, சமீபகாலமாகவே அதன் வேலை சந்தையை ஒழுங்குபடுத்தவும், திறமையானவர்களை ஈர்க்கவும் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மனிதவள அமைச்சகம் அதன் Qiwa தளத்தின் மூலம் அங்கீகாரத் திட்டத்தை வெளியிட்டது. அதாவது, தனியார் துறை நிறுவனங்கள் 2023 முதல் காலாண்டில் 20 சதவீத ஊழியர்களின் ஒப்பந்தங்களை ஆவணப்படுத்த வேண்டும், இரண்டாவது பாதியில் 50 சதவீதம், மற்றும் மூன்றாம் காலாண்டில் 80 சதவீதம் என ஆவணப்படுத்த வேண்டும் என்பதே அங்கீகாரத் திட்டமாகும்.

இந்தத் திட்டம் இரு தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பணியாளரின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ராஜ்ஜியத்தில் வேலைச் சந்தையை உயர்த்துவதற்கும் ஏற்ற நிலையான தொழிலாளர் சூழலை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சவுதி அரேபியா இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டில், பெரிய தொழிலாளர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, அதன் ஸ்பான்சர்ஷிப் முறையை கடுமையாக மேம்படுத்தியிருந்தது.

அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், வேலையின் இயக்கத்தை அனுமதிப்பதுடன் முதலாளிகளின் அனுமதியின்றி வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசா வழங்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகின்றன.

நாட்டின் தொழிலாளர் இயக்கமானது, பணியமர்த்தும் பணி ஒப்பந்தம் முடிவடைந்தவுடன், முதலாளியின் அனுமதியின்றி, வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை முதலாளிகளுக்கு இடையில் மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

அதேபோல், வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசாவிற்கான சீர்திருத்தங்கள், ஒரு கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு, முதலாளிகளின் அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கின்றன. சுமார் 32.2 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சவுதி அரேபியா, பெரிய புலம்பெயர்ந்த வெளிநாட்டவர் சமூகத்தின் தாயகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel