ADVERTISEMENT

மஹ்சூஸ் டிராவில் மூன்று இந்தியர்களுக்கு அடித்த ரொக்கப் பரிசு!! 100,000 திர்ஹம்ஸ் பரிசை வென்ற மகிழ்ச்சியில் வெற்றியாளர்கள்..

Published: 3 Nov 2023, 10:02 AM |
Updated: 3 Nov 2023, 10:03 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல மஹ்சூஸ் டிரா ஒவ்வொரு வாரமும் வெற்றியாளர்களுக்கு 100,000 திர்ஹம்ஸ் உத்தரவாதமான வாராந்திரப் பரிசை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர டிராவில் மூன்று இந்திய வெளிநாட்டவர்கள் இந்த வாரத்திற்கான அதிர்ஷ்டசாலிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மூன்று இந்தியர்களில் ஒருவரான அப்துல் கஃபூர் என்பவர் டாக்ஸி டிரைவர் ஆவார். இவர் ஏழு மாதங்களுக்கு முன்புதான் ஷார்ஜாவில் டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் போதிய அளவு சம்பளம் பெறவில்லை என்றாலும், ஒவ்வொரு வாரமும் மஹ்சூஸ் டிக்கெட்டை தவராமல் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர டிராவில் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கத்தை பரிசாக வென்று அசத்தியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து மனம் திறந்த கஃபூர், தன்னிடம் அதிக பணம் இல்லை என்றாலும், ஒவ்வொரு வாரமும் 35 திர்ஹம்ஸ் செலவழித்து டிக்கெட் வாங்கத் தவறியதில்லை என்றும், டிராவில் வென்ற ரொக்கத் தொகையை வைத்து கடன்களை முடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

 

இவரைப்போலவே, அபுதாபியில் வசிக்கும் இந்தியரான பிரதிக் என்பவரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் மஹ்சூஸ் டிக்கெட்டுகளை வாங்கி வந்த பிரதிக், இப்போது வென்றுள்ள ரொக்கத் தொகையில் பெரும்பான்மையான பகுதியை அவருடைய குழந்தைகளின் கல்விக்காகவும் மற்றும் ஒரு பகுதியை அதிக மஹ்சூஸ் டிக்கெட்டுகளை வாங்குவதற்கும் செலவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மூன்றாவது வெற்றியாளரான சத்தியா என்பவரும் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். இவர் மஹ்சூஸ் டிராவின் தொடக்கத்தில் இருந்து பங்கேற்று வருவதாகவும், தற்போது அவருக்கு கிடைத்த பரிசுத் தொகை அவரது குழந்தையின் கல்விக்காக பயன்படும் என்றும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel