ADVERTISEMENT

அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தினம்.. ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு!! எத்தனை நாட்கள்…??

Published: 22 Nov 2023, 2:11 PM |
Updated: 22 Nov 2023, 2:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊழியர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேதிகள் சனி மற்றும் ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் வருவதால், இது ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, இதே மாதத்தில் தியாகிகள் தினம் என்று அழைக்கப்படும் நினைவு தினத்தை அனுசரிக்க, அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் 1 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள் விடுமுறையையே அனுபவிக்க முடியும்.

கடந்த 1971 ஆம் ஆண்டில் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா மற்றும் உம் அல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என ஒரு நாடாக உருவானதைக் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய தினத்தை அமீரக அரசு கொண்டாடி வருகிறது. இந்தாண்டு நாடு 52வது தேசிய தினத்தை  அனுசரிக்க உள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் யூனியன் தினம் என்றும் அழைக்கப்படும் இந்த தினத்தில், அமீரகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாக குடியிருப்பாளர்கள் தேசிய தினத்தை கொண்டாடுவார்கள் அத்துடன் அரசும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை நடத்தும். அதே போல் இந்தாண்டும் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாக எக்ஸ்போ சிட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT