அமீரக செய்திகள்

உலகளவில் பொருளாதார ரீதியாக மிகவும் நிலையான நாடு அமீரகம்..!! புதிய ஆய்வில் தகவல்…!!

பொருளாதார நிலைத்தன்மை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிலைத்தன்மை கொண்ட நாடுகளின் வரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில், சுவிட்சர்லாந்து பொருளாதார ரீதியாக மிகவும் நிலையான நாடாக முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து அமீரகம், கனடா, ஜெர்மனி, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உள்ளன.

ஒரு நாட்டில் கிடைக்கும் தொழில்முனைவோர் வாய்ப்புகள், மூலதனத்தை எளிதாக அணுகுதல், திறமையான தொழிலாளர்களின் விகிதம், மாற்றியமைக்கும் அறன் மற்றும் வலுவான வர்த்தகம் போன்றவற்றின் அடிப்படையில் பொருளாதார நிலைத்தன்மை மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகம், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (GDP) அரபு உலகில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ளதாக US நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் மொத்த GDP 1.86 டிரில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் தனிநபர் வருமானம் 87,729 டாலர்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விகிதத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 3 டிரில்லியன் திர்ஹம்சாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ள அமீரகம், புதிய பொருளாதாரத் துறைகளை ஆதரிப்பதோடு, பொருளாதார பல்வகைப்படுத்தல் உத்திகளை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், நாட்டின் GDP நிலையான விலையில் 1.62 டிரில்லியன் திர்ஹம்சாக இருந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது தற்போது ஒப்பிடுகையில் 7.9 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது. மேலும் இது 2021-ம் ஆண்டு 337 பில்லியன் திர்ஹம்சுடன் ஒப்பிடும் போது 22.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

கூடுதலாக, உலகெங்கிலும் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உதவி வழங்குவதற்காக டிரில்லியன் கணக்கான திர்ஹம் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!