அமீரகத்தில் விசா காலத்தை நீட்டிக்க என்னென்ன விருப்பங்கள் உள்ளன? ICPன் விதிகள் உட்பட பல்வேறு விபரங்கள் இங்கே..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பார்வையாளர்கள், நாட்டில் தங்கும் காலத்தை நீட்டிக்க விரும்பினால் ஒருமுறை மட்டுமே 30 நாட்களுக்கு நீட்டிக்க முடியும் என்று அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) அறிவித்துள்ளது.
எனவே, நீங்கள் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வர திட்டமிட்டிருந்தாலோ அல்லது தற்போது நாட்டில் தங்கியிருந்தாலோ புதிய விசா நீட்டிப்பு பற்றிய செயல்முறைகள் மற்றும் விதிகள் அனைத்தையும் இங்கே சற்று தெரிந்து கொள்ளலாம்.
விசா நீட்டிப்பு:
உங்கள் நுழைவு அனுமதியை எந்த சுற்றுலா நிறுவனம் விண்ணப்பித்திருந்ததோ, அந்த நிறுவனம் தான் உங்கள் விசாவை நீட்டிக்க முடியும் என்று ICP கூறியுள்ளது. நீங்கள் கூடுதல் நாட்கள் அமீரகத்தில் செலவிட விரும்பினால், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறி, புதிய சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், நீங்கள் ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையத்தை 600 522222 என்ற எண்ணிலும் அல்லது Amer தொடர்பு மையதிற்கு 800 5111 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்வதன் மூலம், உங்கள் குறிப்பிட்ட விசா விண்ணப்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் உங்கள் விசா காலத்தின் படி நாட்டில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம், மாறாக விசா காலாவதியான பிறகும் நாட்டில் தங்கியிருந்தால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விசா விருப்பங்கள்:
ICP இணையதளம் – icp.gov.ae – அல்லது ‘UAE ICP’ என்ற ஸ்மார்ட் ஆப் மூலம், ‘Visit Visa For Friend or Relative’ என்ற வகையின் கீழ், 30-, 60- அல்லது 90-நாள் விசாவிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளது. அதாவது, விண்ணப்பதாரர் UAE குடியிருப்பாளராக இருந்தால், இந்தச் சேவையைப் பயன்படுத்தி 30-, 60- அல்லது 90-நாள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
விசாவை எப்படி நீட்டிப்பது?
முன்பு கூறியது போல, நீங்கள் சுற்றுலா நிறுவனம் மூலம் விசாவைப் பெற்றிருந்தால், நீட்டிப்புக்கு மீண்டும் அதே நிறுவனத்தை அணுக வேண்டும். அதேசமயம், உங்கள் உறவினர் அல்லது நண்பரால் வழங்கப்படும் விசிட் விசாவில் நாட்டிற்குள் நுழைந்தால், விசா நீட்டிப்பு கோரி ICP ஆல் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டர் மூலம் நீட்டிக்க விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்:
ICP வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் 30 நாட்களுக்கு தங்களின் விசாவை நீட்டிக்க விரும்பினால் அதற்காக 750 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel