ADVERTISEMENT

அபுதாபி முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! ஃபுட் டிரக்குகளுக்கான பார்க்கிங் அனுமதியை நிறுத்தி வைத்துள்ள அதிகாரிகள்…

Published: 26 Dec 2023, 6:23 PM |
Updated: 26 Dec 2023, 6:23 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உணவு டிரக்குகளுக்கான பெர்மிட் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள X பதிவில், அபுதாபி சிட்டியில் உணவு டிரக்குகளுக்கான பார்க்கிங் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

தற்போது, நாட்டில் குளிர்காலம் தொடங்கியிருப்பதால், குடியிருப்பாளர்கள் வெளிப்புற இடங்களை நோக்கி படை எடுக்கின்றனர் மற்றும் உணவு டிரக்குகளை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நாடுகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், இத்தகைய பீக் சீசனில் விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் உணவு டிரக் நடத்துபவர்களுக்கு விதிகளைப் பின்பற்றுமாறு அபுதாபி முனிசிபாலிட்டி நினைவூட்டலை வழங்கியுள்ளது.

முக்கியமாக, அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வரை தங்கள் டிரக்குகளை நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் எப்போதும் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel