ADVERTISEMENT

அபுதாபியில் இரவு நேரத்தில் இயற்கையை ரசிக்க இலவச கேம்பிங் இடம்.. எங்கு உள்ளது தெரியுமா..??

Published: 1 Dec 2023, 5:02 PM |
Updated: 1 Dec 2023, 5:33 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கையோடு இயைந்த சிறந்த வெளிப்புறங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் அல் வத்பா ஏரி முகாமுக்கு (Al wathba lake camp) செல்லலாம். கடந்த 2022 இல் அபுதாபியின் முனிசிபாலிட்டி மற்றும் போக்குவரத்துத் துறையால் (DMT) பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட அல் வத்பா லேக் கேம்ப், இலவச கேம்ப் இடங்கள், சைக்கிளிங் மற்றும் ரன்னிங் டிராக், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி மற்றும் சுற்றியுள்ள பாலைவனத்தின் காட்சிகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

இந்த அல் வத்பா லேக் கேம்ப் 24/7 என வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகவே, பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் இந்த பகுதியை அணுகலாம். இத்தகைய அல் வத்பா லேக் கேம்ப்பில் பார்வையாளர்கள் அனுபவிக்கக்கூடிய முதல் மூன்று நடவடிக்கைகள் பற்றி பின்வருமாறுப் பார்க்கலாம்:

1. கேம்ப் அமைத்தல்

இங்கு ஏரி அல்லது பாலைவனத்தின் காட்சிகளுடன், தேர்வு செய்ய 13 தனி கேம்ப் பகுதிகள் உள்ளன. நீங்கள் இங்கு ஒரு கூடாரத்தை அமைக்கலாம் அல்லது அந்த பகுதியில் பொழுதுபோக்கு வாகனங்களை (RVs) பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

2. பிக்னிக் தளங்கள்

அல் வத்பா ஏரியில் பார்பிக்யூக்களுக்காக பிரத்யேக இடங்களுடன் 25 பிக்னிக் தளங்கள் இங்கு உள்ளன. இங்கு பார்வையாளர்கள் சிறந்த காட்சிகளுடன் பொழுதை கழிக்கலாம்.

3. சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடும் பாதை

இப்பகுதியில் ஏரியைச் சுற்றி 1,400 மீட்டருக்கு நடை மற்றும் ஓடும் பாதை உள்ளது மற்றும் 1,200 மீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதையும் உள்ளது. கூடுதலாக, இரண்டு கைப்பந்து மைதானங்கள், ஏழு விளையாட்டு மைதானங்கள் மற்றும் இரண்டு கண்காணிப்பு தளங்கள் உள்ளன. அத்துடன் தளத்தில் உணவு லாரிகள் மற்றும் கஃபேக்கள் இருப்பதால் பார்வையாளர்கள் விருப்பமான உணவுகளைச் சுவைக்கலாம்.

ADVERTISEMENT

இடம்

அல் வத்பா லேக் கேம்ப் அபுதாபி நகரத்திலிருந்து 50 நிமிட தூரத்தில் அல் வத்பா சவுத் பகுதியில் அமைந்துள்ளது. நீங்கள் அபுதாபி சிட்டியில் இருந்து E30 சாலையில் (அல் ராவ்தா சாலை) செல்ல வேண்டும், மேலும் அல் வத்பா அரண்மனையை வலதுபுறம் கடந்து சென்ற பிறகு, ரஸீன் சாலையை நோக்கி எக்ஸிட் வழியில் செல்லவும். அடுத்து, அல் வத்பா லேக் கேம்ப்பிற்கான அடையாளங்களைப் பின்பற்றினால், ஒரு தனிப் பாதை உங்களை நேரடியாக அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel