ADVERTISEMENT

UAE: எலக்ட்ரிக் டெலிவரி பைக்குகளை அறிமுகப்படுத்தும் கரீம்..!! எரிபொருள் செலவை மிச்சப்படுத்த நடவடிக்கை….

Published: 19 Dec 2023, 9:07 PM |
Updated: 19 Dec 2023, 9:08 PM |
Posted By: Menaka

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான கரீம் (Careem) இந்த மாத இறுதிக்குள் துபாயின் சாலைகளில் எலக்ட்ரிக் டெலிவரி பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, அதிக கார்பன்-நியூட்ரல் போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாகும்.

ADVERTISEMENT

அந்தவகையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் எமிரேட்டின் சாலைகளில் 1,000 எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்க இலக்கு இருப்பதாக கரீம் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கரீம் பைக்கின் மூத்த செயல்பாட்டு இயக்குனர் சமி அமின் என்பவர் பேசுகையில், “எங்கள் பிராந்தியத்தை மேம்படுத்துவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் இதைச் செய்வதற்கான ஒரு வழி அமீரகத்தின் நிகர-பூஜ்ஜிய நோக்கங்களை ஆதரிப்பதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ரைட்-ஹெய்லிங் ஆப் மற்றும் உணவு டெலிவரி சேவையை இயக்கும் கரீம், பாரம்பரியமாக அதன் டெலிவரி ரைடர்களுக்கு எரிபொருள் என்ஜின் (combustion engine) மோட்டார் பைக்குகளைப் பயன்படுத்துகிறது. இது விலை உயர்ந்தவை என்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும், ஆனால் எலக்ட்ரிக் டெலிவரி பைக்குகள் இரண்டையும் மேம்படுத்தும் மற்றும் பல நன்மைகள் இருக்கிறது என்று அமின் மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், எலக்ட்ரிக் பைக்குகள், டெலிவரி செலவுகளைக் குறைக்கும், கேப்டன்களின் இயக்க செலவுகளை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளருக்கு செலவு-சேமிப்புக்கு வழிவகுக்கலாம் மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் என்று நன்மைகளை பட்டியலிட்டார்.

ADVERTISEMENT

தற்போது, UAE Cop28 காலநிலை மாற்ற மாநாட்டை எக்ஸ்போ சிட்டி துபாயில் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 2021 ஆம் ஆண்டில், அமீரகம் அதன் நிகர ஜீரோ 2050 மூலோபாய முன்முயற்சியை வெளியிட்டது, இது அடுத்த மூன்று தசாப்தங்களில் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முதலீடு செய்வதற்கான 600 பில்லியன் திர்ஹம்ஸ் திட்டமாகும்.

செலவுகளைக் குறைத்தல்:

Careem இன் ரைடர்கள் தங்கள் எரிபொருளுக்கு பணம் செலுத்துகிறார்கள், ஆனால் பேட்டரியில் இயங்கும் பைக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள்  ஒரு மாதத்திற்கு குறைந்தது 15 சதவீதத்தை சேமிக்கலாம் என்று நிறுவனம் மதிப்பிடுகிறது.

அத்துடன் வரம்பற்ற பேட்டரி மாற்றங்களை அனுமதிக்கும் மாதாந்திர சந்தா சேவைக்கு ரைடர்கள் பதிவு செய்ய முடியும் என்றும், துபாய் முழுவதும் உள்ள பல்வேறு நிலையங்களில் பேட்டரிகள் இருக்கும் என்றும் அமீன் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் ஒன்மோட்டோவின் (OneMoto) நிறுவனர் ஆடம் ரிட்க்வே கூறுகையில், எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, கடந்த ஆண்டு ரைடர்கள் தங்கள் சொந்த செலவில் இருந்து நேரடியாக எரிபொருளுக்காக மாதத்திற்கு 630 மற்றும் 800 திர்ஹம் வரை செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

OneMoto நிறுவனமானது துபாயில் உள்ள பல டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் பைக்குகளை வழங்குகிறது. சில சமயங்களில், என்ஜின் பைக்குகளுக்குப் பதிலாக எலக்ட்ரிக்  பைக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், ரைடர்கள் மாதத்திற்கு 46 சதவிகிதம் வரை சேமிப்பதாக கணக்கிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel