ADVERTISEMENT

UAE: தேசிய தினத்தையொட்டி 52 GB இலவச டேட்டாவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள்..!! எப்படி சலுகையைப் பெறுவது?

Published: 1 Dec 2023, 7:58 PM |
Updated: 1 Dec 2023, 7:58 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (டிசம்பர் 2) தேசிய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், உள்ளூர் டெலிகாம் ஆபரேட்டர்களான எடிசலாட் (e&) மற்றும் du, இலவச டேட்டா, தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு ப்ரோமோஷன்களை வழங்கி தங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டியுள்ளன.

ADVERTISEMENT

அமீரகக் குடியிருப்பாளர்கள் நாட்டின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் மூன்று நாள் நீண்ட வார இறுதியை அனுபவிக்க உள்ள நிலையில், குடியிருப்பாளர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியைப் பரப்பும் விதமாக, போஸ்ட்-பெய்டு (post-paid) திட்டத்தில் குழுசேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு 52 ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதாக du அறிவித்துள்ளது. இந்த சலுகையை அதன் ஆப் மூலம் செயல்படுத்தலாம் என்றும் du டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 52 ஜிபி இலவச டேட்டா சலுகைக்கு 30 திர்ஹம் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த சலுகையைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை, செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு செல்லுபடியாகும். மேலும், ஹோம் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் ப்ரோமோஷன் காலத்தில் கிடைக்கும் 52 தலைப்புகளில் வீடியோ ஆன் டிமாண்ட் மீது 50 சதவீத தள்ளுபடியை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

இது தொடர்பாக Du நிறுவனத்தின் CEO, பஹத் அல் ஹஸ்ஸாவி பேசுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதிப்புகளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியை பரப்புவதே எங்கள் நோக்கம் மற்றும் பிரத்தியேக சலுகைகள் மற்றும் ப்ரோமோஷன்கள் மூலம் தேசிய தின கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், Etisalat by e& நாட்டின் 52வது தேசிய தினத்தை ஒட்டி 52GB உள்ளூர் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் My Etisalat UAE செயலியில் உள்ள “Deals for You” பக்கத்தில் இருந்து இந்தச் சலுகையைப் பெறலாம்.

ADVERTISEMENT

இந்த சலுகை டிசம்பர் 1 முதல் 3 வரை செயல்படுத்தப்படும் மற்றும் ஒருமுறை செயல்படுத்தப்பட்டதும் 52ஜிபி உள்ளூர் டேட்டா டிசம்பர் 1 முதல் 7 வரை செல்லுபடியாகும். எனினும் இந்த சலுகை அமீரக நாட்டைச் சேர்ந்த போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel