அமீரக செய்திகள்

துபாய்: வாகனத்தின் நம்பர் பிளேட் உரிமையை மாற்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ள RTA..!!

அமீரக குடியிருப்பாளர்கள் இப்போது துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மையங்களுக்குச் செல்லாமலேயே UAE பாஸைப் (UAE Pass) பயன்படுத்தி வாகனத்தின் நம்பர் பிளேட் உரிமையை மாற்றும் புதிய வசதியை துபாய் RTA அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் நம்பர் பிளேட்டுகளை வாங்குவதையும் விற்பதையும் ஒழுங்குபடுத்த ஆணையம் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, UAE பாஸ் மூலம் ஒரு சில கிளிக்கில் பரிமாற்ற செயல்முறையை முடிக்க இது குடியிருப்பாளர்களை அனுமதிக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறையின் கீழ், வாகனத்தை வாங்குபவரும் விற்பவரும் தங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தில் (sales purchase agreement-SPA) கையெழுத்திட வேண்டும். இதற்கு நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • வாகனத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர் விற்பனை விலை மற்றும் கட்டண முறையை முன்கூட்டியே ஒப்புக் கொள்ள வேண்டும்.
  • வாகனத்தை விற்கும் நபர் வாங்குபவரின் விவரங்களை (UAE பாஸ், தொலைபேசி எண் அல்லது போக்குவரத்து கோப்பு) பெற வேண்டும்.
  • சரிபார்க்கப்பட்ட UAE பாஸைப் பயன்படுத்தி விற்பனை மற்றும் வாங்குதல் செயல்முறை பதிவு செய்யப்படும்.
  • பின்னர் சேவைக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த புதிய சேவை RTA இன் டிஜிட்டல் உருமாற்ற உத்தி மற்றும் துபாயை உலகின் முன்னணி நகரமாக மாற்றுவதற்கான தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!