ADVERTISEMENT

துபாயில் இன்று குறிப்பிட்ட சாலை மூடல்: வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தல்….

Published: 25 Dec 2023, 5:55 PM |
Updated: 25 Dec 2023, 5:55 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சில சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அவற்றை தற்காலிகமாக மூடுவதாக இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது. சாலை மூடல் தொடர்பான அறிவிப்பை ஆணையம் X தளத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எமிரேட்ஸ் சாலையில் எக்ஸ்போ சாலைக்கும் அல் ஃபயாஹ் டிரக் சாலைக்கும் இடையே தண்ணீர் தேங்கியுள்ளதால் இரு திசைகளிலும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிரமங்களைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

குறிப்பாக, துபாய் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் ஷேக் முகமது பின் சயீத் சாலையிலும், அபுதாபி நோக்கி செல்பவர்கள் எக்ஸ்போ சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, RTA வின் அவசரக்குழு மழையினால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்து, போக்குவரத்தை சீராக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel