அமீரக செய்திகள்

துபாய்: ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள்..!! எங்கு எப்போது சென்று பார்க்கலாம்…??

அமீரகக் குடியிருப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF), ஷாப்பிங் செய்பவர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சிறந்த டீல்களை வழங்குவது மட்டுமில்லாமல், துபாயில் சில முக்கிய இடங்களில் முழு குடும்பத்திற்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.

எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் டிசம்பர் 15 வெள்ளி முதல் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஃபெஸ்டிவலில் துபாயில் உள்ள நான்கு இடங்களில் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.

கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி போன்றவற்றின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்:

DSF வானவேடிக்கை (DSF Fireworks Nights) துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு டிசம்பர் 15 முதல் 24 வரை நடைபெறும்.

அல் சீஃப்:

அல் சீஃப் நகரில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 4 வரை இரவு 9 மணிக்கு வானவேடிக்கைகளை பார்க்கலாம்.

ஹத்தா ஃபெஸ்டிவல்:

டிசம்பர் 31 வரை ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஹத்தாவின் அழகிய மலைகளில் வானத்தை அலங்கரிக்கும் வானவேடிக்கை காட்சிகளை அனுபவிக்கலாம். DSF உடன் இணைந்து நடைபெறும் ஹத்தா ஃபெஸ்டிவலின் ஒரு பகுதியாக வான வேடிகை நிகழ்த்தப்படும், மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மாலைகளில் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு இது தொடங்கும்.

புளூவாட்டர்ஸ், தி பீச், JBR, அல் சீஃப் மற்றும் ஹத்தாவில் புத்தாண்டு கொண்டாட்டம்:

ப்ளூவாட்டர்ஸ், தி பீச், JBR, அல் சீஃப் மற்றும் ஹத்தா ஆகிய இடங்களில் டிசம்பர் 31, 2023  அன்று இரவு வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்கள் புத்தாண்டை வரவேற்கலாம். அதுமட்டுமில்லாமல், புத்தாண்டில் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு இடத்திலும் டிசம்பர் 31 இரவு 11:59 மணிக்கு ஒலிக்கும் சிறப்பு நள்ளிரவு காட்சி இடம்பெறும்.

புளூவாட்டர்ஸ் அண்ட் தி பீச், JBR:

எதிர்வரும் ஜனவரி 5 முதல் 14 வரை இரவு 9 மணிக்கு ப்ளூவாட்டர்ஸ் மற்றும் தி பீச், JBR ஆகியவற்றில் இரவு வானவேடிக்கைகளுடன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாடலாம். கூடுதலாக, பார்வையாளர்கள் எமராத் பெட்ரோலியம் (Emarat Petroleum) வழங்கும் இரண்டு புதிய கண்கவர் DSF ட்ரோன் ஷோக்களையும் இரவு 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு கண்டுகளிக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!