ADVERTISEMENT

அபுதாபியில் டோல் கேட் கட்டணம் இல்லை..!! புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியான அறிவிப்பு….!!

Published: 31 Dec 2023, 9:03 AM |
Updated: 31 Dec 2023, 9:04 AM |
Posted By: Menaka

தலைநகர் அபுதாபியில் புத்தாண்டு தினத்தன்று பொது பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டோல் கேட் கட்டணம் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அபுதாபி எமிரேட்டுக்குள் நுழையும் நான்கு டார்ப் டோல் கேட்களின் கீழ் ஓட்டுநர்கள் இலவசமாக நுழையலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் வசூலிக்கும் வழக்கமான கட்டண முறை செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டுக்கு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 2 செவ்வாய் அன்று எமிரேட்ஸ் முழுவதும் அதிகாரப்பூர்வ வேலை நாள் தொடங்கும்.

ADVERTISEMENT

முன்னதாக, துபாயில் புத்தாண்டுக்கு மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பார்க்கிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT