ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் கிடைக்கும் இலவச Wi-Fi சேவையின் முழுப்பட்டியல் இங்கே..!!

Published: 16 Dec 2023, 10:51 AM |
Updated: 16 Dec 2023, 10:53 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா போன்ற எமிரேட்களில் பல பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை வழங்குகின்றன. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் பொது வைஃபை அணுகலைப் பெறலாம். அவ்வாறு மக்கள் இலவச வைஃபை வசதியை அணுகக்கூடிய அனைத்து இடங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்:

ADVERTISEMENT

அபுதாபி முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) டிசம்பர் 15 அன்று, அபுதாபி கார்னிச் கடற்கரை மற்றும் அல் பத்தீன் (Al Bateen) கடற்கரையில் இலவச வைஃபையுடன் 44 பொதுப் பூங்காக்களை உள்ளடக்கி எமிரேட்டில் அதன் இலவச வைஃபை நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்தது.

எவ்வாறாயினும், நீங்கள் பொது வைஃபை நெட்வொர்க்கை அணுகும்போது அல்லது ​​நெட்வொர்க்கில் இருக்கும்போது இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது போன்ற சில அடிப்படை பாதுகாப்பான நடைமுறைகளை மனதில் வைத்திருப்பது அவசியம்.

ADVERTISEMENT

Wi-Fi UAE:

டெலிகாம் ஆபரேட்டரான du நிறுவனம், நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் இலவச அதிவேக சேவைகளை வழங்குகிறது. Du வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குடியிருப்பாளர்கள் Wi-Fi UAE இடங்களில் ஒரு மணிநேரத்திற்கு இலவசமாக சேவையை அனுபவிக்கலாம். அதன் பிறகு, ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரம் இயக்கப்படும். விளம்பரத்திற்குப் பிறகு, நீங்கள் மற்றொரு ஒரு மணிநேர இலவச Wi-Fi ஐ அனுபவிக்க முடியும்.

கூடுதல் காலத்திற்கு பொது வைஃபையை பயன்படுத்த விரும்புபவர்கள் ‘பிரீமியம் வைஃபை’க்கு பணம் செலுத்தலாம், இது அதிக பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம் மற்றும் நீண்ட ப்ரௌசிங் நேரத்தை அணுக அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

அமீரகம் முழுவதும் Du வழங்கும் இலவச Wi-Fi சேவை கிடைக்கும் அனைத்து இடங்களையும் இங்கே காணலாம்: https://www.du.ae/WiFi-uae/locations

அபுதாபி – ‘ஹாலா வைஃபை (Hala Wifi)’

நீங்கள் அபுதாபியில் , பொது பேருந்துகள், கடற்கரைகள் மற்றும் பொது பூங்காக்கள் போன்ற இடங்களில் இந்த இலவச வைஃபையை அணுகலாம். நேற்று டிசம்பர் 15 முதல், அபுதாபியில் 19, அல் அய்னில் 11 மற்றும் அல் தஃப்ரா பிராந்தியத்தில் 14 என ஒட்டுமொத்தமாக Wi-Fi நெட்வொர்க்கின் கவரேஜ் 44 பொதுப் பூங்காக்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

துபாய்:

துபாயில், துபாய் மெட்ரோ, பொது பேருந்துகள், பொது டாக்சிகள், குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், படகுகள் மற்றும் நீர் பேருந்துகள் என அனைத்து பொதுப் போக்குவரத்திலும் du அதன் வயர்லெஸ் இணைய இணைப்பை வழங்குகிறது. துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் du ஒருங்கிணைந்து பொது போக்குவரத்து பயணிகளுக்கு இலவச இணைய அணுகலை வழங்குகிறது.

ஷார்ஜா – இன்டர்சிட்டி பேருந்துகளில் இலவச வைஃபை:

கடந்த ஏப்ரலில், ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களில் இலவச இணையச் சேவையை அறிமுகப்படுத்தியது. எனவே, மக்கள் பேருந்து நிலையங்களில் தங்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது இலவச வைஃபையை அனுபவிக்கலாம்.

மேலும், பஸ் பயணிகள் பொது வைஃபை அணுகுவதற்கு தங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை வழங்கவோ அல்லது போக்குவரத்து ஆணையத்தில் கணக்கை உருவாக்கவோ தேவையில்லை என்றும் SRTA குறிப்பிட்டுள்ளது.

ராஸ் அல் கைமா – இன்டர்சிட்டி பேருந்துகளில் இலவச வைஃபை:

ஷார்ஜாவைப் போலவே, ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையமும் (RAKTA) அதன் இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களில் பயணிகளுக்கு இலவச வைஃபை மற்றும் ஓமானின் முசந்தம் நகருக்கு பேருந்து சேவைகளையும் வழங்குகிறது. Wi-Fi ஒரு மணிநேரம் மட்டுமே அணுகக் கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கும் இலவச வைஃபை:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் அதன் பார்வையாளர்களுக்கு இலவச வைஃபை வழங்குகிறது. ஆனால், இங்கு வைஃபையுடன் இணைக்க, உங்கள் மொபைல் எண், முழுப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் பதிவுப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

அதேபோன்று அமீரகத்தின் முக்கிய விமான நிலையங்களான அபுதாபி சர்வதேச விமான நிலையம் (AUH), துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையமும் அனைத்து பயணிகளுக்கும் இலவச Wi-Fi சேவையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel