சமீப காலமாக மோசடி கும்பலானது பல்வேறு வகையில் மக்களை ஏமாற்றும் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் பலரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் துபாய் GDRFA-ஆனது குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்குமாறு எச்சரித்துள்ளது.
அதாவது, GDRFA-துபாய் ஒருபோதும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தனிப்பட்ட விவரங்களை கேட்காது என்றும், ஒருவேளை GDRFAயிலிருந்து சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் ஏதேனும் வந்திருந்தால், தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு முன், உள்ளடக்கத்தைப் படிக்குமாறும் ஆணையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக GDRFA-D இணையதளத்தில் பொது பாதுகாப்பு விழிப்புணர்வு செய்தியில், பாஸ்போர்ட் எண், எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற எந்த முக்கிய விவரங்களையும் பகிர்ந்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு நீங்கள் பெறுகின்ற செய்தி GDRFA-D இலிருந்து வந்ததா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், பின்வரும் சேனல்கள் மூலம் ஆணையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அவை:
- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பவர்களுக்கான இலவச எண் – 8005111. இந்த எண் 24/7 இயங்கும்.
- அமீரகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கான சர்வதேச தொடர்பு மையம் – 971 04 313 9999
- மின்னஞ்சல் – amer@gdrfad.gov.ae
வீடியோ அழைப்பின் மூலம் GDRFA-D ஐத் தொடர்புகொள்ளுதல்:
உங்களுக்கு ரெசிடென்சி விசாக்கள் அல்லது நுழைவு அனுமதிகள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் அல்லது கேள்விகள் இருந்தால், GDRFA-D இணையதளம் – http://www.gdrfad.gov.ae மூலம் வீடியோ அழைப்பைக் கோரலாம். முன்பக்க கேமரா அல்லது வெப்கேம் கொண்ட சாதனம் உள்ள எவரும் இந்தச் சேவையை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel