ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை!! விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை…

Published: 10 Dec 2023, 6:46 PM |
Updated: 10 Dec 2023, 6:48 PM |
Posted By: Menaka

இந்திய அரசாங்கம் உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய 40% வரை வரி விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்பொழுது வெங்காய ஏற்றுமதி தடை தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade -DGFT) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தடையானது மார்ச் 31, 2024 வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு உற்பத்தி பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசியை தவிர மற்ற அரிசிகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel