அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று 6.6ºC வரை குறைந்த வெப்பநிலை..!! வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப காலமாக வெப்பநிலை குறைந்து வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதி ஒன்றில் இன்று (சனிக்கிழமை) 6.6ºC வரை வெப்பநிலை சரிந்துள்ளது. நாட்டில் அதிகம் பார்வையிடப்பட்ட மலைத்தொடர்களில் ஒன்றான ஜெபல் ஜெய்ஸ் (Jebel Jais) மலைப்பகுதிகளில் தான் இந்தளவுக்கு வெப்பநிலை சரிந்துள்ளது.

பிரம்மிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகள் மற்றும் இனிமையான வானிலைக்காக நன்கு அறியப்பட்ட ஜெபல் ஜெய்ஸ் குளிர்கால மாதங்களில் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். தற்போது, இங்கு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே குறைந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இங்கு ‘ஜெபல் ஜெய்ஸ் ஜிப்லைன்ஸ்’ மற்றும் ‘டோபோகன் ரைடு’ போன்ற சாகச அனுபவங்களைப் பெறலாம், இப்போது குளிர்காலம் நெருங்கி வருவதால் அவற்றின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 21 க்குப் பிறகு, நாட்டில் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில பகுதிகளில் இப்போதே வெப்பநிலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று காலை 6 மணியளவில் ராஸ் அல் கைமாவில் உள்ள மலைகளில் 6.6ºC வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், ரக்னா 7.3ºC, மெப்ரே மலை 8.9ºC, ஜபல் அல் ரஹ்பா 9.2ºC மற்றும் தம்தா 10.2ºC என நாட்டின் பிற பகுதிகளிலும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அத்துடன் சில பகுதிகளில் இன்று 8ºC ஆக வெப்பநிலை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!