ADVERTISEMENT

UAE: விசா விண்ணப்பங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையம் அபுதாபியில் திறப்பு!! வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் எனத் தகவல்…

Published: 24 Dec 2023, 9:00 PM |
Updated: 24 Dec 2023, 9:00 PM |
Posted By: Menaka

மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார தளமான PureHealth இன் துணை நிறுவனமான SEHA, அபுதாபியில் விசா விண்ணப்பங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையத்தைத் திறப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது அது திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இப்போது அபுதாபி பொது சுகாதார மையத்துடன் இணைந்து புதிய நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையத்தை அல் மரியா ஐலேண்டின் மையத்தில் உள்ள கலேரியாவில் தொடங்கியுள்ளது.

அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் அபுதாபி பொது சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் மாடர் சயீத் அல் நுவைமி, டாக்டர் அஸ்மா அல் ஹலாசே, அபுதாபி குளோபல் மார்க்கெட் ரெஜிஸ்ட்ரேஷன் அத்தாரிட்டியின் CEO ஹமத் அல் மஸ்ரூயி மற்றும் அல் மரியா சில்லறை விற்பனை நிறுவனத்தின் CEO டேவிட் ராபிசன் உட்பட AHS மற்றும் அபுதாபி பொது சுகாதார மையத்தின் உயர் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், இந்த மையம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அணுகக்கூடியதாக இருக்கும் மற்றும் அப்பாயின்ட்மென்ட் அடிப்படையிலான மற்றும் வாக்-இன் மூலம் சேவையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு பிரீமியம், ஃபாஸ்ட் டிராக் மற்றும் வழக்கமான விசா ஸ்கிரீனிங் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) தொற்று நோய்த் துறையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி இது குறித்து கூறும் போது, அல் மரியா ஐலேண்ட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சமூகத்திற்கு மிக உயர்ந்த தரமான பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதிய மையம் குறித்து டாக்டர் கதீஜா அல் மராஷ்டா கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் முக்கிய கூட்டாளர் எங்கள் விசா பரிசோதனை மையங்களை வணிக வளாகங்களிலும் தஷீல் மற்றும் தவ்ஜீஹ் மையங்களிலும் திறப்பதன் மூலம் எங்கள் சேவைகளை சமூகத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், தி கலேரியாவில் உள்ள புதிய மையம், அல் மரியா ஐலேண்ட், அல் ரீம் ஐலேண்ட், சாதியத் ஐலேண்ட் மற்றும் அருகிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் விசா ஸ்கிரீனிங் சேவைகளை எளிதாக அணுகக்கூடிய வகையில், திருப்திகரமான சூழலில் சேவையை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel