ADVERTISEMENT

அமீரகத்தில் ‘புனித ரமலான் மாதம் – 2024’ எப்போது தொடங்கும்? தேதிகளை கணித்த வானியல் சங்கம்..!!

Published: 6 Dec 2023, 3:43 PM |
Updated: 6 Dec 2023, 3:43 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் வானியல் சங்கம், இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் 2024க்கான எதிர்பார்க்கப்படும் தேதிகளை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி, புனித ரமலான் மாதம் மார்ச் 2024 ம் ஆண்டின் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, ரமலான் மாதம் முடிந்து கொண்டாடப்படும் ஈத் அல் பித்ர் பண்டிகையானது ஏப்ரல் 10ம் தேதி அன்று வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வானில் பிறை தோன்றுவதன் அடிப்படையில் பண்டிகைகளின் உண்மையான தேதிகள் தீர்மானிக்கப்படும்.

ஆங்கில நாட்காட்டியைப் போல் அல்லாமல், இஸ்லாமிய மாதங்களானது பிறை பார்ப்பதன் அடிப்படையில் கணக்கிடப்படும். எனவே அதனைப் பொறுத்து இஸ்லாமிய மாதங்கள் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆண்டின் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. இந்த பண்டிகைக் காலத்தில் முஸ்லீம்கள் தங்கள் நோன்பை ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகைக்கான அழைப்புக்கு முன் தொடங்கி, மஃக்ரிப் (சூரியன் மறையும் நேரம்) தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டவுடன் முடிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் பகலில் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்து நோன்பிருப்பதன் காரணமாக, அமீரகம் முழுவதும் இருக்கும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்தின் வேலை நேரமும் குறைக்கப்பட்டு ஆறு மணி நேரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel