அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டை முன்னிட்டு இதுவரை இல்லாதளவில் பிரம்மாண்ட வான வேடிக்கையை நிகழ்த்தவிருக்கும் ராஸ் அல் கைமா…!!

விரைவில் வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் ராஸ் அல் கைமாவிலும் புத்தாண்டு தினத்திற்கான சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் ராஸ் அல் கைமாவில் இதுவரை பார்த்திராத வானவேடிக்கை நிகழ்ச்சிகளை வரும் புத்தாண்டில் பார்த்து ரசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்து வரும் ராஸ் அல் கைமாவில் உள்ள கண்கவர் வான வேடிக்கையில் இந்த வருடம், இதுவரை செய்யப்படாத புதிய நடனக் கூறுகள் மற்றும் நுட்பங்களுடன் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு கொண்டாட்டத்தில், 12 நிமிட இசை வாணவேடிக்கை ராஸ் அல் கைமாவில் நடத்தப்பட்டது, அதில் பைரோ ட்ரோன்கள், நானோ விளக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் பீட்களுக்கு நடனமாடும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த முறை அல் மர்ஜான் ஐலேண்டுக்கும் அல் ஹம்ரா வில்லேஜுக்கும் இடையில் 4.5 கிமீ வாட்டர்ஃப்ரண்டில் நடைபெறவுள்ள வண்ணமயமான ஒளிரும் காட்சி, புதிய சாதனைகளைப் படைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த அற்புதமான இரவுக் காட்சிகளை குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இரண்டு நிகழ்வுகளில் இருந்து கண்டுகளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. முதலாவது இலவச பொது நிகழ்வு ஆகும், இது DJ பொழுதுபோக்கு, குழந்தைகளின் செயல்பாடுகள், ஃபுட  டிரக்குகள் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு பகுதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொன்று, சர்வதேச கலைஞர்களின் நிகழ்ச்சிகள், குழந்தைகள் பகுதி மற்றும் பல்வேறு உணவு விருப்பங்களை வழங்கக்கூடிய சவுண்ட்ஃபெஸ்ட் எனப்படும் தனியார் டிக்கெட்டு நிகழ்வாகும்.

மேலும், டிசம்பர் 31 ஆம் தேதி கொண்டாட்டங்களுக்கு முன்பு,  மரம் விளக்கு விழாக்கள் (tree-lighting ceremonies), கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் மற்றும் அமீரகத்தின் பல ஹோட்டல்களில் காலா இரவு உணவுகள் (gala dinner) போன்ற பல வேடிக்கையான கொண்டாட்டங்களை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வானது ரஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தால் வழிநடத்தப்படுகிறது மற்றும் மர்ஜான், ராஸ் அல் கைமா காவல்துறை, ராஸ் அல் கைமா அரசாங்க ஊடக அலுவலகம், ராஸ் அல் கைமா வர்த்தக சபை, பப்ளிக் ஒர்க்ஸ், ராஸ் அல் கைமா முனிசிபாலிட்டி, அல் ஹம்ரா மற்றும் பலவற்றின் குழுக்கள் இந்த ஏற்பாட்டில் பங்கேற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!