ADVERTISEMENT

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ள துபாய்!! RTA தகவல்….

Published: 28 Dec 2023, 9:48 PM |
Updated: 29 Dec 2023, 8:22 AM |
Posted By: Menaka

துபாயில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதிய ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை அன்று பொது பார்க்கிங் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் டிசம்பர் 31, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டண பார்க்கிங் இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஆணையத்தின் இலவச பார்க்கிங் அணுகல் மல்டி-லெவல் டெர்மினல்களுக்கு பொருந்தாது என்பதை வாகன ஓட்டிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

பின்னர், பார்க்கிங் கட்டணம் ஜனவரி 2, 2024 செவ்வாய் அன்று மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையின் போது இயங்கும் போக்குவரத்து சேவைகளின் நேர அட்டவணைகளையும் RTA வெளிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

RTA சேவை நேரங்கள்

  • தொழில்நுட்ப சோதனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஜனவரி 1ம் தேதி மூடப்படும்.
  • துபாய் மெட்ரோ: ரெட் மற்றும் கிரீன் லைன் டிசம்பர் 31, 2023 அன்று காலை 8 மணி முதல் ஜனவரி 1, 2024 இரவு 11.59 மணி வரை இயங்கும்.
  • துபாய் டிராம்: டிசம்பர் 31, 2023 அன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2, 2024 அன்று அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து இயங்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel