அமீரக செய்திகள்

அபுதாபி, துபாயைத் தொடர்ந்து ஷார்ஜாவிலும் இலவச பார்க்கிங்!! வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ….

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி அபுதாபி, துபாய் ஆகிய எமிரேட்கள் இலவச பார்க்கிங் வசதியை அறிவித்துள்ள நிலையில், இப்போது ஷார்ஜா எமிரேட்டிலும் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜனவரி 1, 2024 அன்று, ஷார்ஜா குடியிருப்பாளர்கள் கட்டணமின்றி பார்க்கிங் செய்யலாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வழக்கமான பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல், ஜனவரி 2, 2024 செவ்வாய்கிழமை மீண்டும் வழக்கமான கட்டண அமைப்பு செயல்படுத்தப்படும்.

இருப்பினும், நீல பார்க்கிங் தகவல் அறிகுறிகளால் அடையாளம் காணப்படும் ஏழு நாள் கட்டண பொது பார்க்கிங் மண்டலங்களுக்கு (7 days paid parking zones) இந்த விலக்கு பொருந்தாது என்பதை வாகன ஓட்டிகள் மனதில் கொள்ள வேண்டும்.

குடிமை அமைப்பின் கூற்றுப்படி, எமிரேட்டில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு பணம் செலுத்தத் தவறினால் 150 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கூடுதல் காலம் தங்கினால் 100 திர்ஹம்ஸ் அபராதமும், மாற்றுத்திறனாளிகள் வாகன ஓட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துவதற்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!