ADVERTISEMENT

துபாய்: படித்துக் கொண்டிருந்த போது சரிந்து விழுந்து உயிரிழந்த இந்திய மாணவர்!!

Published: 10 Dec 2023, 10:22 AM |
Updated: 10 Dec 2023, 10:25 AM |
Posted By: Menaka

துபாயில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 8) 13 வயது இந்திய மாணவர் ஒருவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமீரகத்தில் இருக்கும் சமூக சேவகர் நசீர் வடனப்பள்ளி, வீட்டில் திடீரென சரிந்து விழுந்த மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வென்டிலேட்டர் வைக்கப்பட்டதாகவும், இருப்பினும் அவர் குணமடையவில்லை என்றும் அவர் கூறினார். 8 ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் கால்பந்து மற்றும் கராத்தே போன்றவற்றில் பங்கேற்று சுறுசுறுப்பாக இருப்பார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு பெற்றோரும், தங்கையும் உள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய நசீர், மாணவரின் இழப்பால் அவரது குடும்பம் நிலைகுலைந்துள்ளது என்றும், இந்த இக்கட்டான காலத்தை கடக்க அவர்களுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும், சம்பிரதாயங்களுக்குப் பிறகு, மாணவரின் உடல் கேரளாவில் உள்ள குடும்பத்தின் சொந்த ஊருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படும் என்று கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT