ADVERTISEMENT

அபுதாபி: புத்தாண்டு தினத்தன்று குறிப்பிட்ட வாகனங்களுக்குத் தடை!! விவரங்களை வெளியிட்ட போக்குவரத்து மையம்….

Published: 31 Dec 2023, 1:53 PM |
Updated: 31 Dec 2023, 1:53 PM |
Posted By: Menaka

அமீரக தலைநகர் அபுதாபியில் புத்தாண்டு தினத்தன்று குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ஷேக் சையத் பிரிட்ஜ், மக்தா பிரிட்ஜ், முசாஃபா பிரிட்ஜ் மற்றும் ஷேக் கலீபா பிரிட்ஜ் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் போக்குவரத்து இயக்குனரகம் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் ஒத்துழைப்புடன் (ITC), டிசம்பர் 31, 2023 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி 1, 2024 திங்கள் வரை டிரக்குகள், கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்தத் தடை, திங்கள்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் துப்புரவு நிறுவன வாகனங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கூற்றுப்படி, அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ரோந்து பணியமர்த்தப்படும் மற்றும் ஸ்மார்ட் அமைப்புகள் மூலம் போக்குவரத்து கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே, போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் மூலம் போக்குவரத்து பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்த ஓட்டுநர்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel