ADVERTISEMENT

அமீரகத்தில் ஊழியர் மீது பொய்யான தலைமறைவு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் என்ன செய்வது?

Published: 21 Dec 2023, 11:38 AM |
Updated: 21 Dec 2023, 11:38 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலாளி ஒருவர் ஊழியர் மீது தவறான ‘தலைமறைவு (absconding)’ வழக்குப் பதிவு செய்தால், அவர் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றி தெரிந்துவைத்துக் கொள்வது அவசியமாகும். அதனைப் பற்றிய விபரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ADVERTISEMENT

GDRFA-துபாயின் படி, ஒரு நிறுவனமானது ஒரு ஊழியருக்கு எதிராக தவறான தலைமறைவு வழக்கைப் பதிவு செய்தால் அந்நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். மேலும் இதுபோன்ற சூழலில், ஒரு ஊழியர் முதலாளிக்கு எதிராக மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தில் (MOHRE) புகாரும் தெரிவிக்கலாம்.

மேலும், ஊழியர் தனது நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்றுக்கொள்ள அதாவது கிராஜுட்டி மற்றும் நோட்டீஸ் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அவருக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களைப் பெறுவதற்காக, இந்தப் புகாரை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அமைச்சகத்திடம் கோரலாம்.

ADVERTISEMENT

இவ்வாறு ஊழியர் மீது பொய்யான தலைமறைவு வழக்கு பதிவு செய்யப்படும்போது, காவலில் வைப்பது அல்லது சேவையின் இறுதி உரிமைகள் இல்லாமல் பணியாளரை நாடு கடத்துவது போன்ற தேவையற்ற சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நீதிமன்றங்கள் செல்வதற்கு முன்பாகவே, ஊழியர் ஒரு வழக்கறிஞரிடம் சட்ட உதவியைப் பெறுவதும் சிறந்தது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT