ADVERTISEMENT

துபாயில் மூடப்படவுள்ள பழமையான இந்து கோவில்.. சேவைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அறிவிப்பு..!!

Published: 9 Dec 2023, 10:36 AM |
Updated: 9 Dec 2023, 10:44 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்துக்கள் வழிபட்டு வந்த பிரசித்தி பெற்ற கோவிலான பர் துபாயில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான இந்து கோவில், வரும் ஜனவரி 3, 2024 புதன்கிழமை முதல் ஜெபல் அலியில் உள்ள ஒரு புதிய இடத்திற்கு அதன் சேவைகளை மாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

1950 களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட அந்த சிவன் கோவிலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கோவில் ஜெபல் அலிக்கு மாற்றப்படவுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “எங்கள் பக்தர்கள் அனைவருக்கும் அறிவிப்பதற்காக இது: புதன்கிழமை, ஜனவரி 3, 2024, இந்த கோவில் எங்கள் புதிய இந்து கோவிலான ஜெபல் அலிக்கு மாற்றப்படும்” என்று எழுதப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், வழமையாக கோயிலுக்குச் செல்லும் இந்துக்கள், பர் துபாய் கோயிலுக்கு இனி செல்ல முடியாது என்பதை நினைத்து வருந்துவதாக கூறியுள்ளனர்.

இந்த சிவன் கோவில் கடந்த 1958 இல் நிறுவப்பட்டது மற்றும் பர் துபாயின் மீனா பஜார் பகுதியில் இயங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் சுமார் 5,000 பேர் பர் துபாய் கோவிலுக்கு வருகை தருவதாகவும், மேலும் பண்டிகைகளின் போது எண்ணிக்கை 100,000 வரை உயரும் எனவும் கூறப்படுகின்றது. 

ADVERTISEMENT

ஜனவரி முதல் சேவைகளை மாற்றப்படவிருக்கும் ஜபெல் அலியில் உள்ள கோவிலானது கடந்த ஆண்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel