ADVERTISEMENT

அமீரகத்தில் ஒரே மொபைல் எண்ணில் இரண்டு சிம் கார்டுகளைப் பெறுவது எப்படி? எவ்வளவு செலவாகும்?

Published: 6 Dec 2023, 12:52 PM |
Updated: 9 Apr 2025, 4:31 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் ஒரே எண்ணில் இரண்டு சிம் கார்டுகளைப் பெற விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஒரு ‘multi-SIM’ சேவைக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் வெவ்வேறு சாதனங்களில் ஒரே தொலைபேசி எண்ணின் பல சிம் கார்டுகளையும் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் மல்டி-சிம் சேவையானது, தொலைதொடர்பு நெட்ஒர்க் ஆப்பரேட்டர்களான Etisalat by e& மற்றும் du ஆல் வழங்கப்படுகிறது. எனவே இந்த வசதியை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

மல்டி சிம் எப்படி வேலை செய்கிறது?

உங்களிடம் சரியான எமிரேட்ஸ் ஐடி மற்றும் செயலில் உள்ள மொபைல் எண் இருந்தால் நீங்கள் மல்டி சிம் சேவையைப் பெறலாம். நீங்கள் சேவைக்கு விண்ணப்பித்தவுடன், உங்கள் தரவு, SMS மற்றும் அழைப்புகள் உங்கள் எல்லா சாதனங்களிலும் கிடைக்கும்.

ADVERTISEMENT

உங்களிடம் உள்ள குளோன் செய்யப்பட்ட அல்லது கூடுதல் சிம் கார்டு, பிறருக்கு அழைப்புகள் (outgoing call) செய்ய மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப (sending sms) உங்களை அனுமதிக்கும். இருப்பினும், அழைப்புகள் (incoming call) அல்லது குறுஞ்செய்திகளைப் பெறுவது (receiving sms) முதன்மை சிம்மில் (primary SIM) மட்டுமே சாத்தியமாகும்.

முதன்மை சிம்மை மாற்ற முடியுமா?

Etisalat by e& வாடிக்கையாளர்கள் ‘My Etisalat’ ஆப் மூலம், அவர்களின் கூடுதல் அல்லது குளோன் செய்யப்பட்ட சிம் கார்டை ‘ஆக்டிவ்’ அல்லது ‘பிரைமரி’ எண்ணாக அமைக்கும் விருப்பம் உள்ளது. அப்ளிகேஷனை திறந்ததும் அதில் உள்ள ‘Manage’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து, ‘SIM cards’ என்பதைத் தட்டி, உங்கள் முதன்மை சிம்மிற்கு மாற்ற விரும்பும் சிம் கார்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘Set as active SIM card’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ADVERTISEMENT

ஆனால், duஇன் வாடிக்கையாளர்கள் முதன்மை சிம்மை மாற்ற முடியாது. நீங்கள் மல்டி சிம் சேவைக்கு புதிய சந்தாதாரராக இருந்தால், உங்கள் முதன்மை சிம் கார்டு உங்கள் போஸ்ட்பெய்டு திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் தற்போதைய சிம் கார்டாக இருக்கும்.

ஒரே எண்ணில் எத்தனை சிம் கார்டுகளை பதிவு செய்யலாம்?

Etisalat by e& வாடிக்கையாளர்கள்:

  • ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒரே எண்ணில் இரண்டு சிம் கார்டுகளை வைத்திருக்க முடியும்.
  • போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்கள் ஒரே எண்ணில் ஐந்து சிம் கார்டுகளை வைத்திருக்க முடியும்.

du வாடிக்கையாளர்கள்:

இதில் போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மல்டி சிம் சேவை கிடைக்கும் மேலும் அவர்கள் ஒரே எண்ணில் ஐந்து சிம் கார்டுகளைப் பதிவு செய்யலாம். du வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீ-பெய்டு எண்களுக்குச் சேவை கிடைக்காது.

அமீரகத்தில் பல சிம் கார்டுகளைப் பெறுவது எப்படி?

உங்கள் ஃபோன் எண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பெறுவதற்கான செயல்முறை,  Etisalat by e& மற்றும் du ஆகிய இரண்டிற்கும் ஒரே மாதிரியாக இருக்கும். நீங்கள் மல்டி சிம் கார்டுகளைப் பெற,  Etisalat by e& Business Center அல்லது du store க்கு செல்ல வேண்டும்.

  1. உங்களுக்கு அருகிலுள்ள Etisalat by e& ஸ்டோர்களின் பட்டியலை இங்கே காணலாம்: http://www.etisalat.ae/en/storelocator
  2. உங்களுக்கு அருகிலுள்ள du ஸ்டோர்களின் பட்டியலை இங்கே காணலாம்: https://www.du.ae/personal/helpandsupport/ourshops

செலவு

Etisalat by e& வாடிக்கையாளர்களுக்கு: ஒவ்வொரு குளோன் செய்யப்பட்ட அல்லது கூடுதல் சிம் கார்டுக்கும் மாதத்திற்கு 25 திர்ஹம் மற்றும் ஐந்து சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT).

du வாடிக்கையாளர்களுக்கு: ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் 25 திர்ஹம்ஸ் (அத்துடன் ஐந்து சதவீத VAT) மாதாந்திர கட்டணம் ஆகும்.

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, கட்டணங்கள் அவர்களின் பில்லில் சேர்க்கப்படும் மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, கட்டணங்கள் அவர்களின் ப்ரீபெய்டு இருப்பில் இருந்து கழிக்கப்படும். மேலும், Etisalat by e& மற்றும் du இன் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் இந்த சேவையை நிறுத்திக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel