ADVERTISEMENT

UAE: உணவு தயாரிக்கும் பகுதியில் பூச்சிகள்.. சுகாதாரமற்ற வகையில் உணவை வழங்கி வந்த கஃபேவை மூடிய அதிகாரிகள்..!!

Published: 19 Jan 2024, 11:23 AM |
Updated: 19 Jan 2024, 11:23 AM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள கஃபே ஒன்றில் உணவுப் பாதுகாப்புத் தேவைகள் தொடர்பான பல தொடர்ச்சியான மீறல்கள் கண்டறியப்பட்டதால் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Adafsa) அதனை மூட உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி எமிரேட்டில் வணிக உரிமம் எண் CN-4031247 ஐக் கொண்ட ‘Healthy Dream Food Cafe’ – அபுதாபி கிளை 1 தொடர்ச்சியாக பொது சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் சுகாதார மீறல்களில் ஈடுபட்டதால் நிர்வாக மூடலுக்கு வழிவகுக்கும் உணவுக் கட்டுப்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கஃபே, சுகாதாரத் தரங்களைக் கடைப்பிடிக்கத் தவறியதையும் அத்தியாவசிய உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் எடுத்துக்காட்டும் மூன்று மூடல் எச்சரிக்கைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, உணவு தயாரிக்கும் பகுதிகளில் பூச்சிகள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த கஃபேவின் நிர்வாகம் அதன் மீறல்களைச் சரிசெய்து, ஆணையம் குறிப்பிட்டுள்ள காரணங்களை நீக்கிய பின்னரே அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்பதையும் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் உணவு பாதுகாப்பு முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக மூடல் நடவடிக்கைகளை செயல்படுத்துவது மற்றும் கவனிக்கப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உணவுப் பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றின் தன்மை மற்றும் உணவுப் பொருட்களைப் பொருட்படுத்தாமல், அனைத்து வசதிகளிலும் அவ்வப்போது ஆய்வுகள் ஆணைய ஆய்வாளர்களால் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொதுமக்கள் உணவு நிறுவனங்களில் ஏதேனும் விதிமீறல்களைக் கண்டறிந்தால் அல்லது உணவின் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதைப் பற்றி புகாரளிக்க அரசாங்கத்தின் கட்டணமில்லா எண்ணான 800555ஐத் தொடர்புகொள்ளவும் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel