ADVERTISEMENT

UAE: தொலைந்து போன 9 வயது சிறுமியை ஒரு மணிநேரத்திற்குள் கண்டுபிடித்த காவல்துறை!! பாதுகாப்பாக குடும்பத்திடம் ஒப்படைத்ததாக தகவல்….

Published: 6 Jan 2024, 5:47 PM |
Updated: 6 Jan 2024, 5:52 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் 9 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தொலைந்து போன ஒரு மணி நேரத்திற்குள் அஜ்மான் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது குடும்பத்திடம் பாதுகாப்பாக மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அல் மதீனா விரிவான காவல் நிலையத்தின் தலைவர் கர்னல் கைத் கலீஃபா அல் காபி அவர்கள், அல் ரஷிதியா பகுதியில் வழக்கமான பாதுகாப்பு ரோந்து சென்ற போது குழந்தையை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர், அந்த குழந்தையை அமைதிப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அஜ்மானில் உள்ள சமூக ஆதரவு மையத்தைச் (Social Support Centre) சேர்ந்த சமூக சேவகர் ஒருவர், அந்த சிறுமியைக் கவனித்துக் கொள்ள வந்ததாகவும் அல் காபி கூறினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அல் காபி, 30 நிமிடங்களுக்குப் பிறகு, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடித்து, ஸ்டேஷனில் குழந்தை இருப்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், குழந்தை பூரண ஆரோக்கியத்துடனும், நலமுடனும் இருப்பாதாகத் தெரிவித்த அல் காபி, குழந்தைகளைப் பாதுகாக்கவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை எப்போதும் கண்காணிக்கவும் குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel