ADVERTISEMENT

துபாயில் பரபரப்பான சாலையில் கட்டுக்கடங்காமல் ஓடிய குதிரை!! துணிச்சலுடன் குதிரையைப் பிடித்து அமைதிப்படுத்திய டெலிவரி ரைடர்கள்…..

Published: 11 Jan 2024, 5:39 PM |
Updated: 11 Jan 2024, 5:39 PM |
Posted By: Menaka

துபாயில் சாலைகளில் பயந்து போய் ஓடிக் கொண்டிருந்த குதிரையை ஒரு சில டெலிவரி ரைடர்கள் அமைதிப்படுத்தி பாதுகாப்பாக ஒப்படைத்த ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, அந்த வீடியோவில் குதிரையானது துபாயின் உம் சுகீம் ஸ்ட்ரீட் சிக்னலில் அங்குமிங்குமாக கட்டுக்கடங்காமல் ஓடுவதைக் காணலாம்.

அப்போது, சம்பவ இடத்தில் இருந்த மூன்று டெலிவரி ரைடர்கள் துணிச்சலுடன் குதிரையை அமைதிப்படுத்தும் முயற்சியில் அதை நோக்கி விரைந்து, ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகளையும் காணலாம்.

ADVERTISEMENT

இதையடுத்து தலாபத் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “குதிரை மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிசெய்து துணிச்சலுடன் செயல்பட்ட இரண்டு டெலிவரி ரைடர்களைப் பற்றி நாங்கள் அறிந்ததில் பெருமைப்படுகிறோம். ஒரு நிறுவனமாக, டெலிவரி ரைடர்கள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு அளிக்கும் நேர்மறையான பங்களிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று பாராட்டியிருந்தது.

துபாயின் சாலைகளில் டெலிவரி ரைடர்கள் வீரமாக செயல்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டில், ஒரு டெலிவரி ரைடர் ஒரு பரபரப்பான சாலைக்கு நடுவில் இருந்து ஒரு பெரிய செங்கலை அகற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது.

ADVERTISEMENT

மேலும், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், டெலிவரி ரைடர் அப்துல் கபூரை சமூக ஊடகங்களில் பாராட்டி, அவரைத் தொடர்பு கொள்ள உதவி கேட்டார்.

பின்னர், பட்டத்து இளவரசர் அவரைச் சந்தித்து, “உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன் அப்துல் கஃபூரை, பின்பற்ற வேண்டிய உண்மையான உதாரணம்” என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel